• Apr 25 2026

கோடி பெறுமதியான ஹெரோயினுடன் நபர் கைது!

Ziya / Apr 25th 2026, 11:38 am
image

12 கிலோ கிராம்  ,சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (24) ஹோமாகமவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 


குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த பிரசாத் நிஷாந்த கொலம்பகே என அடையாளம் காணப்பட்டுள்ளார். 


இவர், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'ஹோமாகம ககன' என்பவரின் போதைப்பொருள் கடத்தல்களை வழிநடத்தியவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த தகவலுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


கோடி பெறுமதியான ஹெரோயினுடன் நபர் கைது 12 கிலோ கிராம்  ,சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (24) ஹோமாகமவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த பிரசாத் நிஷாந்த கொலம்பகே என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'ஹோமாகம ககன' என்பவரின் போதைப்பொருள் கடத்தல்களை வழிநடத்தியவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த தகவலுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement