• Oct 27 2026

மன்னார் கடற்றொழில் திணைக்களம் சிங்களமயமாகிறதா? பின்னணியில் நடப்பது என்ன?

Chithra / Oct 27th 2026, 12:00 pm
image


மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தைத் திட்டமிட்டு சிங்களமயமாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


வடக்கு மாகாண கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்களைச் சிங்கள உத்தியோகத்தர்களைக் கொண்டு நிரப்பும் நடவடிக்கைகள் தற்போதைய ஆட்சியில் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இந்நிலை தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அலுவலகத்தில் முன்னதாக பல்வேறு தரங்களில் 8 உத்தியோகத்தர்கள் மாத்திரமே பணியாற்றிய நிலையில், புதிதாக 10 உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்ட 10 பேரில் 8 பேர் சிங்கள உத்தியோகத்தர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இதனையடுத்து, குறித்த அலுவலகத்தில் தமிழ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 10 ஆகவும், சிங்கள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 8 ஆகவும் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில், அங்கு பணியாற்றும் 10 தமிழ் உத்தியோகத்தர்களில் நால்வருக்கு நேற்று (26) கட்டாய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதனால் மன்னார் கடற்றொழில் திணைக்களத்தில் தமிழ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவடைந்துள்ளதுடன், சிங்கள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 8 ஆகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.


குறிப்பாக, கட்டாய இடமாற்றம் வழங்கப்பட்ட நான்கு தமிழ் உத்தியோகத்தர்களும் அண்மையில் மன்னாரில் நடைபெற்ற கடல் அட்டை ஏல நடவடிக்கைகளின்போது உதவிப் பணிப்பாளருடன் இணைந்து பணியாற்றியவர்கள் எனக் கூறப்படுகிறது.


இதன் பின்னணியிலேயே குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.


மேலும், இடமாற்றம் வழங்கப்பட்ட நான்கு உத்தியோகத்தர்களில் ஒருவர் 58 வயதுடையவர் எனவும், அவரது வயதைக் கருத்திற்கொள்ளாமல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.


அதேவேளை, தற்போது அலுவலகத்தில் எஞ்சியுள்ள ஆறு தமிழ் உத்தியோகத்தர்களில் இருவர் எதிர்வரும் ஜனவரி மாதம் வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் வேறு இடங்களுக்குச் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் மன்னார் கடற்றொழில் திணைக்களத்தில் பணியாற்றும் தமிழ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மேலும் குறைவடையும் நிலை உருவாகலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


ஏற்கனவே கடற்றொழில் சார்ந்த பல்வேறு நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் எதிர்கொண்டுள்ள மன்னார் மாவட்டத்தில், இத்தகைய நியமனங்களும் இடமாற்றங்களும் எதிர்காலத்தில் பாரிய நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் எனக் கவலை தெரிவிக்கப்படுகிறது.


இந்த நடவடிக்கைகள் திட்டமிட்ட சிங்களமயமாக்கலின் ஒரு பகுதியா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.


எனினும், குறித்த நியமனங்கள் மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான உத்தியோகபூர்வ காரணங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விளக்கம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.


இந்நிலையில், தமிழ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களின் பின்னணி தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் கடற்றொழில் திணைக்களம் சிங்களமயமாகிறதா பின்னணியில் நடப்பது என்ன மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தைத் திட்டமிட்டு சிங்களமயமாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.வடக்கு மாகாண கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்களைச் சிங்கள உத்தியோகத்தர்களைக் கொண்டு நிரப்பும் நடவடிக்கைகள் தற்போதைய ஆட்சியில் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இந்நிலை தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அலுவலகத்தில் முன்னதாக பல்வேறு தரங்களில் 8 உத்தியோகத்தர்கள் மாத்திரமே பணியாற்றிய நிலையில், புதிதாக 10 உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்ட 10 பேரில் 8 பேர் சிங்கள உத்தியோகத்தர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, குறித்த அலுவலகத்தில் தமிழ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 10 ஆகவும், சிங்கள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 8 ஆகவும் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், அங்கு பணியாற்றும் 10 தமிழ் உத்தியோகத்தர்களில் நால்வருக்கு நேற்று (26) கட்டாய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் மன்னார் கடற்றொழில் திணைக்களத்தில் தமிழ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவடைந்துள்ளதுடன், சிங்கள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 8 ஆகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.குறிப்பாக, கட்டாய இடமாற்றம் வழங்கப்பட்ட நான்கு தமிழ் உத்தியோகத்தர்களும் அண்மையில் மன்னாரில் நடைபெற்ற கடல் அட்டை ஏல நடவடிக்கைகளின்போது உதவிப் பணிப்பாளருடன் இணைந்து பணியாற்றியவர்கள் எனக் கூறப்படுகிறது.இதன் பின்னணியிலேயே குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.மேலும், இடமாற்றம் வழங்கப்பட்ட நான்கு உத்தியோகத்தர்களில் ஒருவர் 58 வயதுடையவர் எனவும், அவரது வயதைக் கருத்திற்கொள்ளாமல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.அதேவேளை, தற்போது அலுவலகத்தில் எஞ்சியுள்ள ஆறு தமிழ் உத்தியோகத்தர்களில் இருவர் எதிர்வரும் ஜனவரி மாதம் வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் வேறு இடங்களுக்குச் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் மன்னார் கடற்றொழில் திணைக்களத்தில் பணியாற்றும் தமிழ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மேலும் குறைவடையும் நிலை உருவாகலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.ஏற்கனவே கடற்றொழில் சார்ந்த பல்வேறு நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் எதிர்கொண்டுள்ள மன்னார் மாவட்டத்தில், இத்தகைய நியமனங்களும் இடமாற்றங்களும் எதிர்காலத்தில் பாரிய நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் எனக் கவலை தெரிவிக்கப்படுகிறது.இந்த நடவடிக்கைகள் திட்டமிட்ட சிங்களமயமாக்கலின் ஒரு பகுதியா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.எனினும், குறித்த நியமனங்கள் மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான உத்தியோகபூர்வ காரணங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விளக்கம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.இந்நிலையில், தமிழ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களின் பின்னணி தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement