• Jun 14 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தடைப்படக்கூடாது! அருட்தந்தை சிறில் காமினி வலியுறுத்து

Chithra / Jun 8th 2026, 4:10 pm
image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை தொடர்பில் இன்று (8) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 


சுரேஷ் சலே தம்மீது அவதூறு வழக்கை தொடர்ந்துள்ள நிலையில், அதனை இல்லாது செய்வதற்காகவே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக சிலர் போலியான வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றார்கள். 


அது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டிய தேவை உள்ளது. தாம் வௌியிட்ட கருத்து ஒன்று தொடர்பில், அவர் தமக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருப்பது உண்மையாகும். 


அந்த வழக்கை இருதரப்பின் இணக்கப்பாடுகளுக்கு அமைய முடிவுக்கு கொண்டு வர முடியும். 

நான் வௌியிட்ட கருத்துக்கள் சரியானவை என நம்புகின்றேன். அதனால் இந்த வழக்கை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வோம் எனக் கூறியிருந்தேன். 


எவ்வாறாயினும் அவர் தற்போது கைது செய்யப்பட்டமையான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை அடிப்படையிலேயாகும். அந்த விசாரணைகள் அனைத்தும் தடையின்றி நடைபெற வேண்டும். 


குறித்த தாக்குதலின் பின்னணியில் ஒரு அரசியல் சூழ்ச்சி உள்ளதா என்பதை அறிந்துக் கொள்ள பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிமை உண்டு. எனவே அந்த விசாரணைகள் எந்தவொரு அழுத்தங்களாலும் இடைநிறுத்தப்படக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்


இதேவேளை பயங்கரவாத தடை சட்டம் திருத்தப்பட வேண்டும் அல்லது முற்றாக இரத்து செய்யப்பட வேண்டும் என அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தடைப்படக்கூடாது அருட்தந்தை சிறில் காமினி வலியுறுத்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை தொடர்பில் இன்று (8) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சுரேஷ் சலே தம்மீது அவதூறு வழக்கை தொடர்ந்துள்ள நிலையில், அதனை இல்லாது செய்வதற்காகவே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக சிலர் போலியான வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றார்கள். அது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டிய தேவை உள்ளது. தாம் வௌியிட்ட கருத்து ஒன்று தொடர்பில், அவர் தமக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருப்பது உண்மையாகும். அந்த வழக்கை இருதரப்பின் இணக்கப்பாடுகளுக்கு அமைய முடிவுக்கு கொண்டு வர முடியும். நான் வௌியிட்ட கருத்துக்கள் சரியானவை என நம்புகின்றேன். அதனால் இந்த வழக்கை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வோம் எனக் கூறியிருந்தேன். எவ்வாறாயினும் அவர் தற்போது கைது செய்யப்பட்டமையான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை அடிப்படையிலேயாகும். அந்த விசாரணைகள் அனைத்தும் தடையின்றி நடைபெற வேண்டும். குறித்த தாக்குதலின் பின்னணியில் ஒரு அரசியல் சூழ்ச்சி உள்ளதா என்பதை அறிந்துக் கொள்ள பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிமை உண்டு. எனவே அந்த விசாரணைகள் எந்தவொரு அழுத்தங்களாலும் இடைநிறுத்தப்படக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்இதேவேளை பயங்கரவாத தடை சட்டம் திருத்தப்பட வேண்டும் அல்லது முற்றாக இரத்து செய்யப்பட வேண்டும் என அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement