இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களையும் முறைகேடாகப் பயன்படுத்துவது தொடர்பில் கணினி அவசரகால தயார்நிலைப் பிரிவுக்கு கடந்த 2025 ஆம் ஆண்டு 12, 650 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சேர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனை கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இணைய மோசடிகள், டிஜிட்டல் மோசடிகள் மற்றும் சைபர் அச்சுறுத்தல் என்பவற்றில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாடுகளில் குறிப்பிடத்தக்களவு போலி கணக்குகள், ஹெக்ட் செய்யப்பட்ட கணக்குகள் மற்றம் சமூக வலைத்தளங்களினூடாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்புப் பட்டிருப்பதாக சேர்ட் நிறுவனத்தின் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி பொறியியலாளர் சாருக்க தமுனுபொல அறிவித்துள்ளார்.
வெறுக்கத்தக்க அல்லது தவறான உள்ளடக்கம் மற்றம் பாலியல் துன்புறுத்தல் பற்றிய உள்ளடக்கம் என்பன அதிகளவிலான புகார்களைக் கொண்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தனிநபர்கள் மற்றம் சாதாரண மக்கள் மீது தாக்கம் செலுத்தும் வகையில் பொதுவான மோசடிகள் மற்றும் போலி தகவல்களை பகர்தலில் அதிகரிப்பை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
நபர்களை ஏமர்ற்றி அவர்களின் வங்கி கணக்கிலக்கங்களுக்கு, இரகசிய குறியீடு மற்றும் கடவுச்சொல் அல்லது கியூவ். ஆர். குறியீடு ஆகிய தனிப்பட்ட தகவல்களை பெற்றுகொண்டு சைபர் குற்றவாளிகள் இவ்வாறு செயலாற்றி வருகிறார்கள்.
தகவல் தொடர்பு, வர்த்தகம் மற்றும் நிதி பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் தளங்களில் அதிகரித்து வரும் நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொள்ள சைபர் குற்றவாளிகள் அதிநவீன மற்றும் மோசடி முறைகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய குழுக்கள், அதாவது இணைய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து போதுமான அறிவு இல்லாத இளைஞர்கள், வயதான பயனர்கள் மற்றும் முதல் முறையாக இணைய பயனர்கள், இதுபோன்ற மோசடிகளால் அடிக்கடி இலக்காகிறார்கள் .
ஆன்லைனில் விழிப்புடன் இருக்கவும், தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களை ஆன்லைனில் பகிர்வதைத் தவிர்க்கவும், சந்தேகத்திற்கிடமான செய்திகள் மற்றும் இணைப்புகளைச் சரிபார்க்கவும், இரு காரணி அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பான கடவுச்சொற்கள் போன்ற வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்களுக்கு விரைவான பதிலளிப்பையும் தணிப்பையும் எளிதாக்குவதற்காக சைபர் சம்பவங்களை உடனடியாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழுவிற்கு தெரிவிக்க வேண்டும்.
சைபர் பாதுகாப்பு சம்பவ பதிலளிப்புக்கான தேசிய அதிகாரசபையான இலங்கை ஊநுசுவு, நாடு முழுவதும் சைபர் மீள்தன்மை, பொது விழிப்புணர்வு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை, சட்ட அமலாக்க அமைப்புகள், சேவை வழங்குநர்கள் மற்றும் பிறருடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறார்கள்.
எந்தவொரு முக்கியமான ஆதரவு சேவை அல்லது சைபர் சம்பவத்தையும் புகாரளிக்க, பொதுமக்கள் இலங்கை cert ஐ 101 என்ற ஹாட்லைனில் அழைக்கலாம் அல்லது report@cert.gov.lkஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இணைய மோசடிகள் அதிகரிப்பு இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களையும் முறைகேடாகப் பயன்படுத்துவது தொடர்பில் கணினி அவசரகால தயார்நிலைப் பிரிவுக்கு கடந்த 2025 ஆம் ஆண்டு 12, 650 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சேர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.இதனை கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இணைய மோசடிகள், டிஜிட்டல் மோசடிகள் மற்றும் சைபர் அச்சுறுத்தல் என்பவற்றில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முறைப்பாடுகளில் குறிப்பிடத்தக்களவு போலி கணக்குகள், ஹெக்ட் செய்யப்பட்ட கணக்குகள் மற்றம் சமூக வலைத்தளங்களினூடாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்புப் பட்டிருப்பதாக சேர்ட் நிறுவனத்தின் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி பொறியியலாளர் சாருக்க தமுனுபொல அறிவித்துள்ளார். வெறுக்கத்தக்க அல்லது தவறான உள்ளடக்கம் மற்றம் பாலியல் துன்புறுத்தல் பற்றிய உள்ளடக்கம் என்பன அதிகளவிலான புகார்களைக் கொண்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தனிநபர்கள் மற்றம் சாதாரண மக்கள் மீது தாக்கம் செலுத்தும் வகையில் பொதுவான மோசடிகள் மற்றும் போலி தகவல்களை பகர்தலில் அதிகரிப்பை அவதானிக்க கூடியதாகவுள்ளது. நபர்களை ஏமர்ற்றி அவர்களின் வங்கி கணக்கிலக்கங்களுக்கு, இரகசிய குறியீடு மற்றும் கடவுச்சொல் அல்லது கியூவ். ஆர். குறியீடு ஆகிய தனிப்பட்ட தகவல்களை பெற்றுகொண்டு சைபர் குற்றவாளிகள் இவ்வாறு செயலாற்றி வருகிறார்கள். தகவல் தொடர்பு, வர்த்தகம் மற்றும் நிதி பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் தளங்களில் அதிகரித்து வரும் நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொள்ள சைபர் குற்றவாளிகள் அதிநவீன மற்றும் மோசடி முறைகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய குழுக்கள், அதாவது இணைய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து போதுமான அறிவு இல்லாத இளைஞர்கள், வயதான பயனர்கள் மற்றும் முதல் முறையாக இணைய பயனர்கள், இதுபோன்ற மோசடிகளால் அடிக்கடி இலக்காகிறார்கள் .ஆன்லைனில் விழிப்புடன் இருக்கவும், தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களை ஆன்லைனில் பகிர்வதைத் தவிர்க்கவும், சந்தேகத்திற்கிடமான செய்திகள் மற்றும் இணைப்புகளைச் சரிபார்க்கவும், இரு காரணி அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பான கடவுச்சொற்கள் போன்ற வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்களுக்கு விரைவான பதிலளிப்பையும் தணிப்பையும் எளிதாக்குவதற்காக சைபர் சம்பவங்களை உடனடியாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழுவிற்கு தெரிவிக்க வேண்டும். சைபர் பாதுகாப்பு சம்பவ பதிலளிப்புக்கான தேசிய அதிகாரசபையான இலங்கை ஊநுசுவு, நாடு முழுவதும் சைபர் மீள்தன்மை, பொது விழிப்புணர்வு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை, சட்ட அமலாக்க அமைப்புகள், சேவை வழங்குநர்கள் மற்றும் பிறருடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறார்கள். எந்தவொரு முக்கியமான ஆதரவு சேவை அல்லது சைபர் சம்பவத்தையும் புகாரளிக்க, பொதுமக்கள் இலங்கை cert ஐ 101 என்ற ஹாட்லைனில் அழைக்கலாம் அல்லது report@cert.gov.lkஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.