இந்தியக் கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்குச் சொந்தமான மூன்று கப்பல்கள் நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளன.
இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த 'திர்' (Tir), 'சுஜாதா' (Sujata) ஆகிய கடற்படைக் கப்பல்களும், இந்தியக் கடலோர காவல்படையின் 'சாரதி' (Sarathi) கப்பலும் நேற்று (26) கொழும்பை வந்தடைந்துள்ளன.
குறித்த கப்பல்கள் நாளை (28) வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கொச்சி கடற்படைத் தளத்திற்குத் திரும்புவதற்கு முன்னதாக, சீசெல்ஸின் போர்ட் விக்டோரியா மற்றும் மாலத்தீவின் மாலே ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் நீண்டதூரப் பயிற்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த வருகை அமைந்துள்ளது.
இந்தியக் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த இளம் கடற்படை அதிகாரிகளுக்கு அடிப்படை கடல்சார் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் இந்தப் பயிற்சிப் படைப்பிரிவு செயற்பட்டு வருகின்றது.
குறித்த படைப்பிரிவு, அதன் மூத்த அதிகாரியும் 'ஐ.என்.எஸ் திர்' கப்பலின் கட்டளை அதிகாரியுமான கேப்டன் டிஜோ கே. ஜோசப் தலைமையில் செயற்பட்டு வருகின்றது.
இந்த நீண்டதூரப் பயிற்சிப் பயணத்தில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஐந்து அதிகாரி பயிற்சி பெறுநர்களும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, திருகோணமலையில் அமைந்துள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்வி நிலையத்தின் இலங்கை கடற்படை அதிகாரி பயிற்சி பெறுநர்களுக்குப் பயிற்சிகளை வழங்குவதற்காக, இதே படைப்பிரிவைச் சேர்ந்த 'ஐ.என்.எஸ் தரங்கிணி' கப்பல் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்தது.
தற்போதைய விஜயத்தின்போது, இலங்கை கடற்படையின் பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரோஹன் ஜோசப் இந்தியக் கப்பல்களுக்குச் சென்று பார்வையிடவுள்ளார்.
இதன்போது கப்பல்களின் கட்டளை அதிகாரிகள், பயிற்சி அதிகாரிகள் மற்றும் பயிற்சி பெறுநர்களுடன் அவர் கலந்துரையாடவுள்ளார்.
மேலும், இந்தியப் பயிற்சிப் படைப்பிரிவின் மூத்த அதிகாரி மற்றும் கப்பல்களின் கட்டளை அதிகாரிகள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படைப் பகுதி தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ டி சில்வா ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, இந்திய மற்றும் இலங்கை கடற்படை அதிகாரி பயிற்சி பெறுநர்களுக்கிடையில் தொழில்முறை அனுபவப் பகிர்வுகள், பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், இந்தியக் கடற்படை பயிற்சி பெறுநர்கள் திருகோணமலையிலுள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்வி நிலையத்திற்கும், இலங்கை கடற்படை பயிற்சி பெறுநர்கள் இந்தியப் பயிற்சிக் கப்பல்களுக்கும் பரஸ்பர விஜயங்களை மேற்கொள்ளவுள்ளனர்.
இதற்கிடையில், இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளின் கூட்டு இசை நிகழ்ச்சி இன்று (27) கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 'அண்டை நாடுகள் முதன்மை' கொள்கை மற்றும் 'மஹாசாகர்' (MAHASAGAR) தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் இந்த நல்லெண்ணப் பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.
கொழும்பில் நங்கூரமிட்ட இந்தியாவின் மூன்று கப்பல்கள் – பின்னணி என்ன இந்தியக் கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்குச் சொந்தமான மூன்று கப்பல்கள் நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளன.இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த 'திர்' (Tir), 'சுஜாதா' (Sujata) ஆகிய கடற்படைக் கப்பல்களும், இந்தியக் கடலோர காவல்படையின் 'சாரதி' (Sarathi) கப்பலும் நேற்று (26) கொழும்பை வந்தடைந்துள்ளன.குறித்த கப்பல்கள் நாளை (28) வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் கொச்சி கடற்படைத் தளத்திற்குத் திரும்புவதற்கு முன்னதாக, சீசெல்ஸின் போர்ட் விக்டோரியா மற்றும் மாலத்தீவின் மாலே ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் நீண்டதூரப் பயிற்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த வருகை அமைந்துள்ளது.இந்தியக் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த இளம் கடற்படை அதிகாரிகளுக்கு அடிப்படை கடல்சார் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் இந்தப் பயிற்சிப் படைப்பிரிவு செயற்பட்டு வருகின்றது.குறித்த படைப்பிரிவு, அதன் மூத்த அதிகாரியும் 'ஐ.என்.எஸ் திர்' கப்பலின் கட்டளை அதிகாரியுமான கேப்டன் டிஜோ கே. ஜோசப் தலைமையில் செயற்பட்டு வருகின்றது.இந்த நீண்டதூரப் பயிற்சிப் பயணத்தில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஐந்து அதிகாரி பயிற்சி பெறுநர்களும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, திருகோணமலையில் அமைந்துள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்வி நிலையத்தின் இலங்கை கடற்படை அதிகாரி பயிற்சி பெறுநர்களுக்குப் பயிற்சிகளை வழங்குவதற்காக, இதே படைப்பிரிவைச் சேர்ந்த 'ஐ.என்.எஸ் தரங்கிணி' கப்பல் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்தது.தற்போதைய விஜயத்தின்போது, இலங்கை கடற்படையின் பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரோஹன் ஜோசப் இந்தியக் கப்பல்களுக்குச் சென்று பார்வையிடவுள்ளார்.இதன்போது கப்பல்களின் கட்டளை அதிகாரிகள், பயிற்சி அதிகாரிகள் மற்றும் பயிற்சி பெறுநர்களுடன் அவர் கலந்துரையாடவுள்ளார்.மேலும், இந்தியப் பயிற்சிப் படைப்பிரிவின் மூத்த அதிகாரி மற்றும் கப்பல்களின் கட்டளை அதிகாரிகள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படைப் பகுதி தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ டி சில்வா ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, இந்திய மற்றும் இலங்கை கடற்படை அதிகாரி பயிற்சி பெறுநர்களுக்கிடையில் தொழில்முறை அனுபவப் பகிர்வுகள், பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.அத்துடன், இந்தியக் கடற்படை பயிற்சி பெறுநர்கள் திருகோணமலையிலுள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்வி நிலையத்திற்கும், இலங்கை கடற்படை பயிற்சி பெறுநர்கள் இந்தியப் பயிற்சிக் கப்பல்களுக்கும் பரஸ்பர விஜயங்களை மேற்கொள்ளவுள்ளனர்.இதற்கிடையில், இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளின் கூட்டு இசை நிகழ்ச்சி இன்று (27) கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் 'அண்டை நாடுகள் முதன்மை' கொள்கை மற்றும் 'மஹாசாகர்' (MAHASAGAR) தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் இந்த நல்லெண்ணப் பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.