• Oct 30 2026

அஸ்வசும கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கிடைத்த சந்தர்ப்பம்

Chithra / Oct 30th 2026, 2:45 pm
image


இலங்கையில் 'அஸ்வசும' நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மேன்முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.


அஸ்வசும நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 13 இலட்சத்து 91 ஆயிரத்து 830 விண்ணப்பங்கள் தகுதியற்றவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து, தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்கள் தொடர்பில் மீள்பரிசீலனை கோரி மேன்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 11ஆம் பிரிவுக்கு அமைவாக இந்த மேன்முறையீட்டு நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது.


அதன்படி, 2026 ஒக்டோபர் 29ஆம் திகதி முதல் நவம்பர் 11ஆம் திகதி வரை மேன்முறையீடுகளைச் சமர்ப்பிப்பதற்குக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


இதேவேளை, அஸ்வசும நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியானவர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும், தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள நலன்புரிப் பிரிவு தொடர்பில் திருப்தியடையாத பயனாளிகளும் மேன்முறையீடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, அஸ்வசும கொடுப்பனவுகளுக்காக விண்ணப்பித்துத் தகுதி பெறாதவர்களும், தமக்கு வழங்கப்பட்டுள்ள நலன்புரிப் பிரிவில் மாற்றம் கோர விரும்புபவர்களும் நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வசும கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு கிடைத்த சந்தர்ப்பம் இலங்கையில் 'அஸ்வசும' நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மேன்முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.அஸ்வசும நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 13 இலட்சத்து 91 ஆயிரத்து 830 விண்ணப்பங்கள் தகுதியற்றவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்கள் தொடர்பில் மீள்பரிசீலனை கோரி மேன்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 11ஆம் பிரிவுக்கு அமைவாக இந்த மேன்முறையீட்டு நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது.அதன்படி, 2026 ஒக்டோபர் 29ஆம் திகதி முதல் நவம்பர் 11ஆம் திகதி வரை மேன்முறையீடுகளைச் சமர்ப்பிப்பதற்குக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதேவேளை, அஸ்வசும நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியானவர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும், தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள நலன்புரிப் பிரிவு தொடர்பில் திருப்தியடையாத பயனாளிகளும் மேன்முறையீடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, அஸ்வசும கொடுப்பனவுகளுக்காக விண்ணப்பித்துத் தகுதி பெறாதவர்களும், தமக்கு வழங்கப்பட்டுள்ள நலன்புரிப் பிரிவில் மாற்றம் கோர விரும்புபவர்களும் நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement