• Oct 28 2026

தென்கொரியா செல்லக் காத்திருக்கும் இலங்கை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

Chithra / Oct 28th 2026, 12:06 pm
image


இலங்கை மாணவர்களுக்கு தென்கொரியாவில் உயர்கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கும் நோக்கிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம், கொரியாவின் வெங்க்சின் (Changshin) பல்கலைக்கழகத்துடன் 2023ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டிருந்தது. எனினும், சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அந்த ஒப்பந்தம் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை.


இதனையடுத்து, இலங்கையின் தொழில் அமைச்சு, தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் உள்ளிட்ட ஐந்து தரப்பினரை உள்ளடக்கி புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, தெரிவுசெய்யப்படும் இலங்கை மாணவர்களுக்கு கொரியாவின் வெங்க்சின் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.


அத்துடன், கல்வியை நிறைவுசெய்த பின்னர் அங்குள்ள தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் நீண்டகாலம் வசிப்பதற்குமான வாய்ப்புகளை ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

தென்கொரியா செல்லக் காத்திருக்கும் இலங்கை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு இலங்கை மாணவர்களுக்கு தென்கொரியாவில் உயர்கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கும் நோக்கிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம், கொரியாவின் வெங்க்சின் (Changshin) பல்கலைக்கழகத்துடன் 2023ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டிருந்தது. எனினும், சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அந்த ஒப்பந்தம் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை.இதனையடுத்து, இலங்கையின் தொழில் அமைச்சு, தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் உள்ளிட்ட ஐந்து தரப்பினரை உள்ளடக்கி புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, தெரிவுசெய்யப்படும் இலங்கை மாணவர்களுக்கு கொரியாவின் வெங்க்சின் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.அத்துடன், கல்வியை நிறைவுசெய்த பின்னர் அங்குள்ள தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் நீண்டகாலம் வசிப்பதற்குமான வாய்ப்புகளை ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

Advertisement

Advertisement

Advertisement