• May 14 2026

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயார்! - ஜனாதிபதி

Chithra / Feb 4th 2026, 9:36 am
image


நாட்டின் மனித வளத்தைப் பயன்படுத்தி, வேறுபாடுகளைப் புறந்தள்ளி, பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 


அதற்காக நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 


கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்று வரும் இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்று யுகம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.


அறியாமைக்குப் பதிலாக அறிவையும், பழைய தப்பெண்ணங்களுக்குப் பதிலாக முன்னேற்றத்தையும், பிரிவினைக்குப் பதிலாக ஒற்றுமையையும் கொண்ட புதிய மனித வளத்தை நாம் உருவாக்க வேண்டும். இதற்கான புரட்சிகரமான பொறுப்பை ஏற்க எமது அரசாங்கம் தயாராக உள்ளது.


133 ஆண்டுகால காலனித்துவ ஆட்சியிலிருந்து 1948 இல் சுதந்திரம் பெற்றதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இதற்காக இரத்தம், கண்ணீர் மற்றும் வியர்வையைச் சிந்திய எமது முன்னோர்களை ஒருபோதும் மறக்க முடியாது என்றார்.


அவர்களின் தியாகத்தால்தான் இன்று நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறோம் என அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.


இந்த ஆண்டின் சுதந்திர தினக் கருப்பொருளான "இலங்கையைக் கட்டியெழுப்புவோம்" என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, அது எமது இறையாண்மை மற்றும் சுதந்திரத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.


எமது முன்னோர்கள் கொண்டிருந்த உயரிய தொழில்நுட்ப அறிவையும் வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டு புதிய பொருளாதாரப் பாதையில் நாம் பயணிக்க வேண்டும்.


நாட்டின் பலம் எமது ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது., எமது அகராதியிலுள்ள மிகவும் அவலட்சணமான இரண்டு சொற்கள் 'இனவாதம்' மற்றும் 'தீவிரவாதம்' ஆகும்.


நாம் பிளவுபட்டால் எமது பலம் குன்றிவிடும். எமது நாட்டில் எந்தவொரு இனவாதத்திற்கோ அல்லது தீவிரவாதத்திற்கோ இடமளிக்கப் போவதில்லை. தேசிய ஒற்றுமையே எமது இலக்கு, என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படும் போதே 'இலங்கையைக் கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருள் அர்த்தமுள்ளதாக மாறும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.


சர்வதேச ரீதியில் இலங்கை ஒரு கௌரவமான நாடாகத் திகழ வேண்டும் எனவும், சட்டமும் ஒழுங்கும் இல்லாத இடத்தில் அபிவிருத்தி சாத்தியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


பழைய தவறுகளைக் களைந்து, நல்ல விடயங்களை உள்வாங்கி, பலமான பொருளாதாரத்தைக் கொண்ட புதிய இலங்கையை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உரையில் அழைப்பு விடுத்தார்.

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயார் - ஜனாதிபதி நாட்டின் மனித வளத்தைப் பயன்படுத்தி, வேறுபாடுகளைப் புறந்தள்ளி, பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்காக நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்று வரும் இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.நாட்டின் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்று யுகம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.அறியாமைக்குப் பதிலாக அறிவையும், பழைய தப்பெண்ணங்களுக்குப் பதிலாக முன்னேற்றத்தையும், பிரிவினைக்குப் பதிலாக ஒற்றுமையையும் கொண்ட புதிய மனித வளத்தை நாம் உருவாக்க வேண்டும். இதற்கான புரட்சிகரமான பொறுப்பை ஏற்க எமது அரசாங்கம் தயாராக உள்ளது.133 ஆண்டுகால காலனித்துவ ஆட்சியிலிருந்து 1948 இல் சுதந்திரம் பெற்றதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இதற்காக இரத்தம், கண்ணீர் மற்றும் வியர்வையைச் சிந்திய எமது முன்னோர்களை ஒருபோதும் மறக்க முடியாது என்றார்.அவர்களின் தியாகத்தால்தான் இன்று நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறோம் என அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.இந்த ஆண்டின் சுதந்திர தினக் கருப்பொருளான "இலங்கையைக் கட்டியெழுப்புவோம்" என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, அது எமது இறையாண்மை மற்றும் சுதந்திரத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.எமது முன்னோர்கள் கொண்டிருந்த உயரிய தொழில்நுட்ப அறிவையும் வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டு புதிய பொருளாதாரப் பாதையில் நாம் பயணிக்க வேண்டும்.நாட்டின் பலம் எமது ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது., எமது அகராதியிலுள்ள மிகவும் அவலட்சணமான இரண்டு சொற்கள் 'இனவாதம்' மற்றும் 'தீவிரவாதம்' ஆகும்.நாம் பிளவுபட்டால் எமது பலம் குன்றிவிடும். எமது நாட்டில் எந்தவொரு இனவாதத்திற்கோ அல்லது தீவிரவாதத்திற்கோ இடமளிக்கப் போவதில்லை. தேசிய ஒற்றுமையே எமது இலக்கு, என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படும் போதே 'இலங்கையைக் கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருள் அர்த்தமுள்ளதாக மாறும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.சர்வதேச ரீதியில் இலங்கை ஒரு கௌரவமான நாடாகத் திகழ வேண்டும் எனவும், சட்டமும் ஒழுங்கும் இல்லாத இடத்தில் அபிவிருத்தி சாத்தியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.பழைய தவறுகளைக் களைந்து, நல்ல விடயங்களை உள்வாங்கி, பலமான பொருளாதாரத்தைக் கொண்ட புதிய இலங்கையை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உரையில் அழைப்பு விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement