சீரற்ற காலநிலை காரணமாக 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்கும் அனைத்து பணிகளையும் 2026ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய முடியாது என, 2027ஆம் ஆண்டுக்காக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள நிதி மூலோபாய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளைச் சீரமைப்பதற்காக 2026ஆம் ஆண்டில் 500 பில்லியன் ரூபாய் மேலதிக நிதி ஒதுக்கீட்டை பாராளுமன்றம் அங்கீகரித்திருந்தாலும், மீள்குடியேற்றத் திட்டங்களின் பரந்தளவு மற்றும் அவற்றின் சிக்கலான தன்மை காரணமாக அனைத்து பணிகளையும் இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய இயலாது என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், 2026ஆம் ஆண்டுக்காக அங்கீகரிக்கப்பட்ட மேலதிக நிதி ஒதுக்கீட்டில் பயன்படுத்தப்படாத தொகையை 2027ஆம் ஆண்டுக்கு எடுத்துச் செல்வதற்கு பொது நிதி முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ ஏற்பாடுகள் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், இன்னும் நிறைவு செய்யப்பட வேண்டிய பணிகளுக்குத் தேவையான நிதியின் அளவு, 2026ஆம் ஆண்டின் இறுதியில் மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டின் பின்னரே தீர்மானிக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தத் தேவைகளில் ஒரு பகுதியை 2027ஆம் ஆண்டுக்கான முதன்மைச் செலவு வரம்பிற்குள் நிர்வகிக்க முடியும் என்றாலும், மீதமுள்ள பணிகளை நிறைவு செய்ய மேலதிக வரவு-செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தேவைப்படலாம் என்றும், அந்த நிதியின் அளவு மற்றும் அது எப்போது தேவைப்படும் என்பது தற்போது உறுதியாகக் கணிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் நிதி மூலோபாய அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
டித்வா சீரமைப்புப் பணிகளில் மேலும் தாமதம் – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு சீரற்ற காலநிலை காரணமாக 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்கும் அனைத்து பணிகளையும் 2026ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய முடியாது என, 2027ஆம் ஆண்டுக்காக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள நிதி மூலோபாய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனர்த்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளைச் சீரமைப்பதற்காக 2026ஆம் ஆண்டில் 500 பில்லியன் ரூபாய் மேலதிக நிதி ஒதுக்கீட்டை பாராளுமன்றம் அங்கீகரித்திருந்தாலும், மீள்குடியேற்றத் திட்டங்களின் பரந்தளவு மற்றும் அவற்றின் சிக்கலான தன்மை காரணமாக அனைத்து பணிகளையும் இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய இயலாது என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.மேலும், 2026ஆம் ஆண்டுக்காக அங்கீகரிக்கப்பட்ட மேலதிக நிதி ஒதுக்கீட்டில் பயன்படுத்தப்படாத தொகையை 2027ஆம் ஆண்டுக்கு எடுத்துச் செல்வதற்கு பொது நிதி முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ ஏற்பாடுகள் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால், இன்னும் நிறைவு செய்யப்பட வேண்டிய பணிகளுக்குத் தேவையான நிதியின் அளவு, 2026ஆம் ஆண்டின் இறுதியில் மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டின் பின்னரே தீர்மானிக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, இந்தத் தேவைகளில் ஒரு பகுதியை 2027ஆம் ஆண்டுக்கான முதன்மைச் செலவு வரம்பிற்குள் நிர்வகிக்க முடியும் என்றாலும், மீதமுள்ள பணிகளை நிறைவு செய்ய மேலதிக வரவு-செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தேவைப்படலாம் என்றும், அந்த நிதியின் அளவு மற்றும் அது எப்போது தேவைப்படும் என்பது தற்போது உறுதியாகக் கணிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் நிதி மூலோபாய அறிக்கை குறிப்பிட்டுள்ளது.