கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால், கனடியர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகவல் நானோஸ் ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்தது.
மேலும், கனடியர்களில் ஐந்தில் ஒருவர் (20%) கடந்த ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ஒரு கட்டணத்தை செலுத்தாமல் தவறவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
55 வயதுக்கு குறைவானவர்கள் உணவுக்காக சிற்றூந்து கடன், கடன் அட்டை, மின்சார கட்டணம் போன்றவற்றை நிலுவையில் வைக்கும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
18 முதல் 34 வயதுடையோரில் 18.1% பேர் சில சமயங்களில் அல்லது அடிக்கடி கட்டணம் செலுத்த தவறியுள்ளனர்.
மாதாந்த செலவுகள் தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இதனால் உணவுப் பொருட்கள் வாங்குவதில் நுகர்வோருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு. மக்களுக்கு பெரும் சிரமம் கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால், கனடியர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல் நானோஸ் ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்தது.மேலும், கனடியர்களில் ஐந்தில் ஒருவர் (20%) கடந்த ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ஒரு கட்டணத்தை செலுத்தாமல் தவறவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 வயதுக்கு குறைவானவர்கள் உணவுக்காக சிற்றூந்து கடன், கடன் அட்டை, மின்சார கட்டணம் போன்றவற்றை நிலுவையில் வைக்கும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. 18 முதல் 34 வயதுடையோரில் 18.1% பேர் சில சமயங்களில் அல்லது அடிக்கடி கட்டணம் செலுத்த தவறியுள்ளனர்.மாதாந்த செலவுகள் தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இதனால் உணவுப் பொருட்கள் வாங்குவதில் நுகர்வோருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.