யாழ்ப்பாணம் நாவாந்துறை வடக்கு 11 ஆம் வட்டாரம் சாபி நகர் கிராமத்தில் மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மாநகரக் குளம் நிரம்பி மழை வெள்ள நீர் அதனை அண்டியுள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் சென்றமையினால் அப்பகுதி வாழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொது மக்கள் பாதிக்கப்பட்டமை தொடர்பில் மாநகர முதல்வர் அவர்களுக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து,
பொது மக்களின் நேரடியான அழைப்புகளுக்கு அமைவாக மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா குறித்த பகுதிக்கு நேற்றைய தினம் கள விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்ததுடன், வெள்ளப் பாதிப்புக்களையும் நேரடியாக பார்வையிட்டிருந்தார்.
இப் பகுதி நீண்டகாலமாகவே இவ்வாறு மழை காலங்களில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றமையை அறிந்த முதல்வர் மக்களுடன் உரையாடும் போது, மாநகரசபையின் முழுமையான பங்குபற்றுதல்களுடன் மாவட்ட செயலகம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் ஆகிய திணைக்களங்களுடன் கலந்துரையாடி இக் குளத்தை அபிவிருத்தி செய்து வடிகாலமைப்பை சீரமைத்து நிரந்தர தீர்வைப் பெற்றுத் தர முயற்சிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தற்போது ஏற்பட்டிருக்கின்ற வெள்ள நிலமைகளை கட்டுப்படுத்தவும், வெள்ள நீரை வெளியேற்றவும் தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநகர சுகாதாரப்பிரிவு உத்தியோகத்தர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் மேற்படி கள விஜயத்தின் போது மாநகர பிரதி முதல்வர் இ.தயாளன், சுகாதாரக்குழு தலைவர் எஸ்.சாரூபன், மாநகரசபை உறுப்பினர்கள், அப்பகுதி வாழ் சமூக செயற்பாட்டாளர்கள், மாநகர துறைசார் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாவாந்துறையில் வெள்ளப் பாதிப்பு- நேரில் பார்வையிட்டு தற்காலிக தீர்வு யாழ்ப்பாணம் நாவாந்துறை வடக்கு 11 ஆம் வட்டாரம் சாபி நகர் கிராமத்தில் மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மாநகரக் குளம் நிரம்பி மழை வெள்ள நீர் அதனை அண்டியுள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் சென்றமையினால் அப்பகுதி வாழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பொது மக்கள் பாதிக்கப்பட்டமை தொடர்பில் மாநகர முதல்வர் அவர்களுக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து,பொது மக்களின் நேரடியான அழைப்புகளுக்கு அமைவாக மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா குறித்த பகுதிக்கு நேற்றைய தினம் கள விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்ததுடன், வெள்ளப் பாதிப்புக்களையும் நேரடியாக பார்வையிட்டிருந்தார்.இப் பகுதி நீண்டகாலமாகவே இவ்வாறு மழை காலங்களில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றமையை அறிந்த முதல்வர் மக்களுடன் உரையாடும் போது, மாநகரசபையின் முழுமையான பங்குபற்றுதல்களுடன் மாவட்ட செயலகம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் ஆகிய திணைக்களங்களுடன் கலந்துரையாடி இக் குளத்தை அபிவிருத்தி செய்து வடிகாலமைப்பை சீரமைத்து நிரந்தர தீர்வைப் பெற்றுத் தர முயற்சிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.மேலும் தற்போது ஏற்பட்டிருக்கின்ற வெள்ள நிலமைகளை கட்டுப்படுத்தவும், வெள்ள நீரை வெளியேற்றவும் தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநகர சுகாதாரப்பிரிவு உத்தியோகத்தர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.முதல்வரின் மேற்படி கள விஜயத்தின் போது மாநகர பிரதி முதல்வர் இ.தயாளன், சுகாதாரக்குழு தலைவர் எஸ்.சாரூபன், மாநகரசபை உறுப்பினர்கள், அப்பகுதி வாழ் சமூக செயற்பாட்டாளர்கள், மாநகர துறைசார் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.