• Oct 28 2026

இரண்டு நாட்களாகியும் கரைதிரும்பாத மீனவர்கள்! களமிறங்கிய ஹெலிகாப்டர்

Chithra / Oct 28th 2026, 2:19 pm
image


முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போன மூன்று மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


இலங்கைக் கடற்படை, வான்படை மற்றும் புதுமாத்தளன் கடற்றொழிலாளர்களின் எட்டு மீன்பிடிப் படகுகள் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.


கடந்த 26ஆம் திகதி காலை 7.30 மணியளவில் முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து படகில் கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்களே இதுவரை கரைதிரும்பவில்லை.


முல்லைத்தீவு, அம்பலவன்பொக்கணை பகுதியைச் சேர்ந்த அன்ரனி ஜூட் (26), யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீ புஷ்பராஜா (42) மற்றும் மன்னாரைச் சேர்ந்த மொஹமட் ரிஸ்வான் (48) ஆகியோரே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.


குறித்த கடற்பரப்பில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகளில் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளன.


இதனையடுத்து, கடற்படையினரின் கடல்வழித் தேடுதல் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இலங்கை வான்படையின் ஹெலிகொப்டரைப் பயன்படுத்தி வான்வழித் தேடுதலையும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, இன்று (28) காலை முதல் இலங்கை வான்படையினர் ஹெலிகொப்டர் மூலம் வான்வழித் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.


அதேவேளை, கடற்படையின் படகுகளுடன் புதுமாத்தளன் கடற்றொழிலாளர்களுக்குச் சொந்தமான எட்டு மீன்பிடிப் படகுகளும் இணைந்து காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.


மேலும், சம்பவம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளும் குறித்த பகுதிக்கு வருகை தந்து மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கடற்றொழிலுக்குச் சென்று இரண்டு நாட்களாகியும் மூன்று மீனவர்களும் கரைதிரும்பாத நிலையில், அவர்களின் நிலை தொடர்பில் உறவினர்களும் சக கடற்றொழிலாளர்களும் கவலையடைந்துள்ளனர்.


இரண்டு நாட்களாகியும் கரைதிரும்பாத மீனவர்கள் களமிறங்கிய ஹெலிகாப்டர் முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போன மூன்று மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இலங்கைக் கடற்படை, வான்படை மற்றும் புதுமாத்தளன் கடற்றொழிலாளர்களின் எட்டு மீன்பிடிப் படகுகள் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.கடந்த 26ஆம் திகதி காலை 7.30 மணியளவில் முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து படகில் கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்களே இதுவரை கரைதிரும்பவில்லை.முல்லைத்தீவு, அம்பலவன்பொக்கணை பகுதியைச் சேர்ந்த அன்ரனி ஜூட் (26), யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீ புஷ்பராஜா (42) மற்றும் மன்னாரைச் சேர்ந்த மொஹமட் ரிஸ்வான் (48) ஆகியோரே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.குறித்த கடற்பரப்பில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகளில் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளன.இதனையடுத்து, கடற்படையினரின் கடல்வழித் தேடுதல் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இலங்கை வான்படையின் ஹெலிகொப்டரைப் பயன்படுத்தி வான்வழித் தேடுதலையும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, இன்று (28) காலை முதல் இலங்கை வான்படையினர் ஹெலிகொப்டர் மூலம் வான்வழித் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.அதேவேளை, கடற்படையின் படகுகளுடன் புதுமாத்தளன் கடற்றொழிலாளர்களுக்குச் சொந்தமான எட்டு மீன்பிடிப் படகுகளும் இணைந்து காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.மேலும், சம்பவம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளும் குறித்த பகுதிக்கு வருகை தந்து மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.கடற்றொழிலுக்குச் சென்று இரண்டு நாட்களாகியும் மூன்று மீனவர்களும் கரைதிரும்பாத நிலையில், அவர்களின் நிலை தொடர்பில் உறவினர்களும் சக கடற்றொழிலாளர்களும் கவலையடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement