• Jul 27 2026

6,000 பேருந்துகள் வந்தாலும் இலங்கை போக்குவரத்து சபையால் முறையாக இயக்க முடியாது – கெமுனு விஜேரத்ன அதிருப்தி

Bus
Chithra / Jul 27th 2026, 9:45 am
image


அரசாங்கம் 600 அல்ல, 6,000 பேருந்துகளை புதிதாக நாட்டுக்கு இறக்குமதி செய்து வழங்கினாலும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


கொழும்பில் உள்ள சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


தூர சேவைப் போக்குவரத்துக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 சொகுசுப் பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


எனினும், 6,000 பேருந்துகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டாலும், அவற்றை இலங்கை போக்குவரத்து சபையினால் முறையாகப் பராமரித்து இயக்க முடியாது என்பதே தற்போதைய நிலைமை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இலங்கை போக்குவரத்து சபையின் முறையற்ற நிர்வாகம் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 2 கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் முன்வைத்த தரவுகளை அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


அதேவேளை, 2025ஆம் ஆண்டில் புகையிரத திணைக்களத்தின் வருமானம் 17 பில்லியன் ரூபாவாக இருந்த போதிலும், அதன் செலவு 47 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்படி, புகையிரத திணைக்களத்துக்கு நாளொன்றுக்கு 8.7 கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.


தற்போது நாட்டில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களில் சுமார் 85 சதவீதமானோருக்கான சேவையை சுமார் 14,000 தனியார் பேருந்துகள் வழங்குகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை போக்குவரத்து சபையிடம் சுமார் 3,500 பேருந்துகள் மட்டுமே இயங்குகின்ற நிலையில், அவை 8 முதல் 10 சதவீதமான சேவையையே வழங்குகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.


இவ்வாறான சூழ்நிலையில், வீதி உள்கட்டமைப்புகள் மற்றும் நாட்டின் நடைமுறைச் சாத்தியக்கூறுகளை கருத்திற்கொள்ளாமல் புதிய பேருந்துகளை இறக்குமதி செய்வது, அரசாங்கத்தின் தோல்விகளை மறைப்பதற்கான விளம்பர அரசியல் நாடகம் என அவர் விமர்சித்தார்.


6,000 பேருந்துகள் வந்தாலும் இலங்கை போக்குவரத்து சபையால் முறையாக இயக்க முடியாது – கெமுனு விஜேரத்ன அதிருப்தி அரசாங்கம் 600 அல்ல, 6,000 பேருந்துகளை புதிதாக நாட்டுக்கு இறக்குமதி செய்து வழங்கினாலும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள்ள சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.தூர சேவைப் போக்குவரத்துக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 சொகுசுப் பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.எனினும், 6,000 பேருந்துகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டாலும், அவற்றை இலங்கை போக்குவரத்து சபையினால் முறையாகப் பராமரித்து இயக்க முடியாது என்பதே தற்போதைய நிலைமை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.இலங்கை போக்குவரத்து சபையின் முறையற்ற நிர்வாகம் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 2 கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் முன்வைத்த தரவுகளை அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.அதேவேளை, 2025ஆம் ஆண்டில் புகையிரத திணைக்களத்தின் வருமானம் 17 பில்லியன் ரூபாவாக இருந்த போதிலும், அதன் செலவு 47 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்படி, புகையிரத திணைக்களத்துக்கு நாளொன்றுக்கு 8.7 கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.தற்போது நாட்டில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களில் சுமார் 85 சதவீதமானோருக்கான சேவையை சுமார் 14,000 தனியார் பேருந்துகள் வழங்குகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை போக்குவரத்து சபையிடம் சுமார் 3,500 பேருந்துகள் மட்டுமே இயங்குகின்ற நிலையில், அவை 8 முதல் 10 சதவீதமான சேவையையே வழங்குகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.இவ்வாறான சூழ்நிலையில், வீதி உள்கட்டமைப்புகள் மற்றும் நாட்டின் நடைமுறைச் சாத்தியக்கூறுகளை கருத்திற்கொள்ளாமல் புதிய பேருந்துகளை இறக்குமதி செய்வது, அரசாங்கத்தின் தோல்விகளை மறைப்பதற்கான விளம்பர அரசியல் நாடகம் என அவர் விமர்சித்தார்.

Advertisement

Advertisement

Advertisement