• Jul 27 2026

அடுத்த மாதம் எரிபொருள் விலை திருத்தமா? – பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட தகவல்

Chithra / Jul 27th 2026, 9:41 am
image


அடுத்த மாதம் இலங்கையில் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுமா என்பதை தற்போது உறுதியாகக் கூற முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


எரிபொருட்களுக்கான மாதாந்த விலைத் தீர்மானம், விலை நிர்ணய காலப்பகுதியின் எஞ்சிய நாட்களில் சர்வதேச சந்தையில் நிலவும் சராசரி மசகு எண்ணெய் விலையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.


இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள புதிய மோதல்கள் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருவதால், தற்போதைய நிலையில் நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


மாதாந்த சராசரி விலையையே வழக்கமாகக் கருத்தில் கொண்டு எரிபொருள் விலையைத் தீர்மானிப்பதாகவும், இந்த மாதம் நிறைவடைய இன்னும் நான்கு நாட்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


எனவே, அந்த நான்கு நாட்களில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பதைப் பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


அடுத்த மாதம் எரிபொருள் விலை திருத்தமா – பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட தகவல் அடுத்த மாதம் இலங்கையில் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுமா என்பதை தற்போது உறுதியாகக் கூற முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.எரிபொருட்களுக்கான மாதாந்த விலைத் தீர்மானம், விலை நிர்ணய காலப்பகுதியின் எஞ்சிய நாட்களில் சர்வதேச சந்தையில் நிலவும் சராசரி மசகு எண்ணெய் விலையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள புதிய மோதல்கள் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருவதால், தற்போதைய நிலையில் நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மாதாந்த சராசரி விலையையே வழக்கமாகக் கருத்தில் கொண்டு எரிபொருள் விலையைத் தீர்மானிப்பதாகவும், இந்த மாதம் நிறைவடைய இன்னும் நான்கு நாட்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எனவே, அந்த நான்கு நாட்களில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பதைப் பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement