• Sep 13 2026

மூதூரில் அதிரடி சுற்றிவளைப்பு; சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 வாகனங்கள் மீட்பு! சாரதிகள் தப்பியோட்டம்

Chithra / Sep 13th 2026, 4:43 pm
image


திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவலி கங்கைப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு வாகனங்கள் நேற்று  (12) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


இதன்போது, உரிய அனுமதிப்பத்திரம் இன்றி மஹாவலி கங்கையில் இறக்கி மணல் அகழ்வில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படும் மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளன.


எனினும், குறித்த வாகனங்களின் சாரதிகள் பொலிஸாரிடம் சிக்காமல் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


அத்துடன், வாகனங்களை மூதூர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மூதூரில் அதிரடி சுற்றிவளைப்பு; சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 வாகனங்கள் மீட்பு சாரதிகள் தப்பியோட்டம் திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவலி கங்கைப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு வாகனங்கள் நேற்று  (12) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இதன்போது, உரிய அனுமதிப்பத்திரம் இன்றி மஹாவலி கங்கையில் இறக்கி மணல் அகழ்வில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படும் மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளன.எனினும், குறித்த வாகனங்களின் சாரதிகள் பொலிஸாரிடம் சிக்காமல் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.அத்துடன், வாகனங்களை மூதூர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement