15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் 42 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக வகுப்பு நடத்துவதற்காக சிறுமியின் வீட்டிற்குச் சென்ற சந்தர்ப்பத்தில், சந்தேகநபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர் திருமணமான 42 வயதுடையவர் எனவும், அவரது மனைவி சுகாதாரத்துறையில் பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் தாயார் கண்டி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் கைத்தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றி பரிசோதித்துள்ளனர். அதில் ஆபாசமான காட்சிகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிலூகா பாலிபான தலைமையிலான குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் வகுப்பு ஆசிரியர் கைது கைத்தொலைபேசியில் ஆபாசக் காட்சிகள் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் 42 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக வகுப்பு நடத்துவதற்காக சிறுமியின் வீட்டிற்குச் சென்ற சந்தர்ப்பத்தில், சந்தேகநபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சந்தேகநபர் திருமணமான 42 வயதுடையவர் எனவும், அவரது மனைவி சுகாதாரத்துறையில் பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிறுமியின் தாயார் கண்டி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் கைத்தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றி பரிசோதித்துள்ளனர். அதில் ஆபாசமான காட்சிகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிலூகா பாலிபான தலைமையிலான குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.