இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று (25) பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கனிப்பொருள் மணல் லிமிட்டட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உதேனி தசநாயக்க இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஊழியர்களை பணியமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 30 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவரும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தசாசன அமைச்சின் மூலம் புத்தகங்களை அச்சிடும் நடவடிக்கையில் குறிப்பிட்ட கொள்முதல் நடைமுறைகளை மீறியதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தனக்கு நெருக்கமான நிறுவனமொன்றுக்கு மூன்று சந்தர்ப்பங்களில் 4,790,000 ரூபாய் பெறுமதியான புத்தகங்களை அச்சிடுவதற்கான பணிகளை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அச்சிடப்பட்ட புத்தகங்களை களஞ்சியசாலைக்கு பெற்றுக்கொள்ளாமலேயே அதற்கான கொடுப்பனவுகளை மேற்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும், தனக்கு நெருக்கமான நிறுவனத்திற்கு அதிக இலாபத்தை பெற்றுக்கொடுத்ததாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட முன்னாள் செயலாளர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மேலும், முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி சினாரி லக்மந்தி ஹெட்டியாராச்சியும் இன்று (25) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமது கணவருக்கு இடைநிறுத்தப்பட்ட அல்லது தளர்த்தப்பட்ட சிறைத்தண்டனையை பெற்றுக்கொடுக்குமாறு கோரி, கொழும்பு மேல் நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக மேல் நீதிமன்ற ஊழியருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான ஹட்டன் – ரூவன்புர பகுதியில் காணிகளை பெற்றுத்தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் பெற்ற குற்றச்சாட்டில், ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் சுந்தரராஜ் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (24) கைது செய்யப்பட்ட அவர், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, தமக்கு எதிரான குற்றச்சாட்டை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், தாம் பெற்றுக்கொண்ட 6 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை நீதிமன்றத்தில் செலுத்துவதற்கும் அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபரை 50,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.
2022ஆம் ஆண்டு முதல் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கள உத்தியோகத்தர் ஒருவருடன் இணைந்து, ஹட்டன் – ரூவன்புர பகுதியில் உள்ள ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளை பெற்றுத்தருவதாகக் கூறி பலரிடம் இருந்து 6 இலட்சம் ரூபாய் முதல் 15 இலட்சம் ரூபாய் வரையான தொகைகளை தனது கணக்கில் பெற்றுக்கொண்டதாகவும், இதுவரை குறித்த காணிகளை வழங்கவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள்: ஒரே நாளில் முக்கியஸ்தர்கள் பலர் அதிரடிக் கைது இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று (25) பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை கனிப்பொருள் மணல் லிமிட்டட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உதேனி தசநாயக்க இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஊழியர்களை பணியமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 30 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இதேவேளை, புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவரும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.புத்தசாசன அமைச்சின் மூலம் புத்தகங்களை அச்சிடும் நடவடிக்கையில் குறிப்பிட்ட கொள்முதல் நடைமுறைகளை மீறியதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.தனக்கு நெருக்கமான நிறுவனமொன்றுக்கு மூன்று சந்தர்ப்பங்களில் 4,790,000 ரூபாய் பெறுமதியான புத்தகங்களை அச்சிடுவதற்கான பணிகளை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், அச்சிடப்பட்ட புத்தகங்களை களஞ்சியசாலைக்கு பெற்றுக்கொள்ளாமலேயே அதற்கான கொடுப்பனவுகளை மேற்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும், தனக்கு நெருக்கமான நிறுவனத்திற்கு அதிக இலாபத்தை பெற்றுக்கொடுத்ததாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்ட முன்னாள் செயலாளர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.மேலும், முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி சினாரி லக்மந்தி ஹெட்டியாராச்சியும் இன்று (25) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தமது கணவருக்கு இடைநிறுத்தப்பட்ட அல்லது தளர்த்தப்பட்ட சிறைத்தண்டனையை பெற்றுக்கொடுக்குமாறு கோரி, கொழும்பு மேல் நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக மேல் நீதிமன்ற ஊழியருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இச்சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இதேவேளை, காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான ஹட்டன் – ரூவன்புர பகுதியில் காணிகளை பெற்றுத்தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் பெற்ற குற்றச்சாட்டில், ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் சுந்தரராஜ் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (24) கைது செய்யப்பட்ட அவர், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.இதன்போது, தமக்கு எதிரான குற்றச்சாட்டை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.மேலும், தாம் பெற்றுக்கொண்ட 6 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை நீதிமன்றத்தில் செலுத்துவதற்கும் அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து சந்தேகநபரை 50,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.2022ஆம் ஆண்டு முதல் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கள உத்தியோகத்தர் ஒருவருடன் இணைந்து, ஹட்டன் – ரூவன்புர பகுதியில் உள்ள ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளை பெற்றுத்தருவதாகக் கூறி பலரிடம் இருந்து 6 இலட்சம் ரூபாய் முதல் 15 இலட்சம் ரூபாய் வரையான தொகைகளை தனது கணக்கில் பெற்றுக்கொண்டதாகவும், இதுவரை குறித்த காணிகளை வழங்கவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.