மலையகப் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் வகையில், தேசிய மலையகப் பெண்கள் சம்மேளனம் ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளது.
பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்புடன் இணைந்து செயற்படும் இச்சம்மேளனம், கடந்த நவம்பர் 02ஆம் திகதி கொழும்பில் இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது, திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டு இன்றும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மலையகப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் நிலைமைகள் தொடர்பில் விரிவாகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன், மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமை, அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள தடைகள், கல்விப் பிரச்சினைகள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல என்றும், அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி கௌரவமானதும் பாதுகாப்பானதுமான வாழ்க்கையை ஏற்படுத்த அரசாங்கம் உள்ளிட்ட உரிய தரப்பினர் தலையிட வேண்டும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில், தோட்டங்களில் தொழில்புரியும் மற்றும் தோட்டப் பகுதிகளில் வாழும் பெண்கள், தமது பிரச்சினைகளையும் உரிமைக் கோரிக்கைகளையும் ஊடகங்களின் முன்னிலையில் தைரியமாக முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மலையகப் பெண்கள் தமது மௌனத்தைக் கலைத்து, தங்களுக்கான குரலைத் தாங்களே ஒலிக்கச் செய்து, சமூக மாற்றத்திற்கான தலைமைத்துவத்தை நோக்கி முன்னேறி வருவது பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பிற்குப் பெருமையளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையகப் பெண்களின் வாழ்க்கையில் மாற்றம் வருமா அரசுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மலையகப் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் வகையில், தேசிய மலையகப் பெண்கள் சம்மேளனம் ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளது.பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்புடன் இணைந்து செயற்படும் இச்சம்மேளனம், கடந்த நவம்பர் 02ஆம் திகதி கொழும்பில் இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.இதன்போது, திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டு இன்றும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மலையகப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் நிலைமைகள் தொடர்பில் விரிவாகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.அத்துடன், மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமை, அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள தடைகள், கல்விப் பிரச்சினைகள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல என்றும், அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி கௌரவமானதும் பாதுகாப்பானதுமான வாழ்க்கையை ஏற்படுத்த அரசாங்கம் உள்ளிட்ட உரிய தரப்பினர் தலையிட வேண்டும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.இந்நிலையில், தோட்டங்களில் தொழில்புரியும் மற்றும் தோட்டப் பகுதிகளில் வாழும் பெண்கள், தமது பிரச்சினைகளையும் உரிமைக் கோரிக்கைகளையும் ஊடகங்களின் முன்னிலையில் தைரியமாக முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.மலையகப் பெண்கள் தமது மௌனத்தைக் கலைத்து, தங்களுக்கான குரலைத் தாங்களே ஒலிக்கச் செய்து, சமூக மாற்றத்திற்கான தலைமைத்துவத்தை நோக்கி முன்னேறி வருவது பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பிற்குப் பெருமையளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.