புலம்பெயர் அமைப்புகளுடன் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான முழுமையான விபரங்களைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் இதுவரை ஏன் பதிலளிக்கவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பில் நேற்று (05) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகப் பாரிய போராட்டங்களை முன்னெடுத்ததுடன், நீதிமன்றங்களையும் நாடியிருந்ததாகச் சுட்டிக்காட்டினார்.
எனினும், தற்போது அதேபோன்றதொரு சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், மக்களின் நலனுக்காக ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று மக்களுக்கே நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஒக்டேன் 95 பெற்றோலின் விலை 500 ரூபாவையும் தாண்டியுள்ள நிலையில், எரிபொருள் விலை அதிகரிப்பும் பேருந்துக் கட்டண உயர்வும் அன்றாட வருமானத்தை நம்பி வாழும் ஏழை மக்களைப் பெரிதும் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அரசாங்கம் புலம்பெயர் அமைப்புகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அவை தொடர்பான முழுமையான தகவல்களை அரசாங்கம் ஏன் இதுவரை வெளியிடவில்லை எனவும் சீலரத்ன தேரர் கேள்வியெழுப்பினார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதேவேளை, ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பிலும் பல்வேறு கேள்விகள் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பிட்ட சிலரைப் பழிவாங்குவதற்காகச் சட்டங்கள் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.
அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் மௌனம் காப்பது ஏன் தேரர் பகிரங்க கேள்வி புலம்பெயர் அமைப்புகளுடன் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான முழுமையான விபரங்களைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் இதுவரை ஏன் பதிலளிக்கவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.கொழும்பில் நேற்று (05) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகப் பாரிய போராட்டங்களை முன்னெடுத்ததுடன், நீதிமன்றங்களையும் நாடியிருந்ததாகச் சுட்டிக்காட்டினார்.எனினும், தற்போது அதேபோன்றதொரு சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், மக்களின் நலனுக்காக ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று மக்களுக்கே நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.மேலும், ஒக்டேன் 95 பெற்றோலின் விலை 500 ரூபாவையும் தாண்டியுள்ள நிலையில், எரிபொருள் விலை அதிகரிப்பும் பேருந்துக் கட்டண உயர்வும் அன்றாட வருமானத்தை நம்பி வாழும் ஏழை மக்களைப் பெரிதும் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அரசாங்கம் புலம்பெயர் அமைப்புகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அவை தொடர்பான முழுமையான தகவல்களை அரசாங்கம் ஏன் இதுவரை வெளியிடவில்லை எனவும் சீலரத்ன தேரர் கேள்வியெழுப்பினார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.அதேவேளை, ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பிலும் பல்வேறு கேள்விகள் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பிட்ட சிலரைப் பழிவாங்குவதற்காகச் சட்டங்கள் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.