சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசல் உண்டியலில் பணத்தை அடையாளம் தெரியாத நபரொருவர் திருடிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.
குறித்த திருட்டுச் சம்பவம் நேற்றுமுன்தினம் (04) மற்றும் நேற்று (05) ஆகிய இரு தினங்களிலும் பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் நேற்று வியாழக்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நபரை அடையாளம் காண்பதற்கும், அவரைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறையில் பட்டப்பகலில் பள்ளிவாசலை குறிவைத்த மர்ம நபர் - சிசிடிவியில் சிக்கிய காட்சி சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசல் உண்டியலில் பணத்தை அடையாளம் தெரியாத நபரொருவர் திருடிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.குறித்த திருட்டுச் சம்பவம் நேற்றுமுன்தினம் (04) மற்றும் நேற்று (05) ஆகிய இரு தினங்களிலும் பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சம்பவம் தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் நேற்று வியாழக்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நபரை அடையாளம் காண்பதற்கும், அவரைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.