• Nov 06 2026

போதைப் பொருளுக்கு எதிரான நடைப்பயணம்!

Ziya / Nov 6th 2026, 3:10 pm
image


நேற்று 04 ம் திகதி காலை 4 மணிக்கு கண்டி ஹந்தாணை பகுதியில் உள்ள விகாரையில் இருந்து நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகளை போதைப் பொருள் பாவனையில் இருந்து மீட்டெடுக்கும் முகமாக போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபயணம் ஒன்றை ஹந்தானை பகுதியில் உள்ள பௌத்த விகாரையை சேர்ந்த பௌத்த மத துறவிகள் மற்றும் அப் பகுதியில் உள்ள மக்கள் இணைந்து நடை பயணத்தை ஆரம்பித்தனர்.


ஹந்தாணையில் இருந்து கண்டி நகருக்கு வரும் போது தத்தா மாளிகைக்கு சென்று அங்கு வணங்கி பின்னர் நடைபயணம் மீண்டும் ஆரம்பித்து கெட்டம்பே பகுதியில் உள்ள பௌத்த விகாரையில் மத வழிபாட்டை முடித்துவிட்டு மீண்டும் தொடர்ந்து நடைபயணம் ஆரம்பித்து கம்பளையை அன்டிய பகுதியில் நேற்று இரவு தங்கி மீண்டும் நேற்று 5 ம் திகதி காலை 7.00 மணிக்கு தங்களது நடை பயணத்தை ஆரம்பித்தனர்.


கம்பளை பகுதியில் ஆரம்பித்து நடைபயணம் உலப்பனை நாவலப்பிட்டி கினிக்கத்தேன நகருக்கு வந்து அங்கு உள்ள பௌத்த விகாரையில் நேற்று இரவு தங்கி இன்று காலை 5 மணிக்கு மீண்டும் கினிக்கத்தேன தியகல நோட்டன் கிரிவன்னெலிய மவுஸ்சாகலை நல்லதண்ணி நகரில் உள்ள நாகதீப பௌத்த விகாரையை சென்றடையும்.


நாளைய தினம் 7 ம் திகதி அதிகாலை 2 மணிக்கு நல்லதண்ணி நாகதீப பௌத்த விகாரையில் இருந்து சிவனடி பாத மலைக்கு சென்று அங்கு தரிசனம் செய்த பின்னர் இரத்தினபுரி வழியாக பலாபத்தரவை சென்றடையும் என ஹந்தானை பௌத்த விகாரையை மதகுரு தெரிவித்தார்.


தொடர்ந்து இரத்தினபுரி க்கு எதிர் வரும் 8 ம் திகதி சென்றடையும் எனவும் அன்றைய தினம் இரத்தினபுரியில் இலங்கை திரு நாட்டில் போதைப் பொருள் மற்றும் மது போன்றவற்றில் இருந்து தற்போது உள்ள நமது இளம் சமூதாயத்தை பாதுகாக்க விழிப்புணர்வு உரையினை நிகழ்த்த உள்ளார்.

போதைப் பொருளுக்கு எதிரான நடைப்பயணம் நேற்று 04 ம் திகதி காலை 4 மணிக்கு கண்டி ஹந்தாணை பகுதியில் உள்ள விகாரையில் இருந்து நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகளை போதைப் பொருள் பாவனையில் இருந்து மீட்டெடுக்கும் முகமாக போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபயணம் ஒன்றை ஹந்தானை பகுதியில் உள்ள பௌத்த விகாரையை சேர்ந்த பௌத்த மத துறவிகள் மற்றும் அப் பகுதியில் உள்ள மக்கள் இணைந்து நடை பயணத்தை ஆரம்பித்தனர்.ஹந்தாணையில் இருந்து கண்டி நகருக்கு வரும் போது தத்தா மாளிகைக்கு சென்று அங்கு வணங்கி பின்னர் நடைபயணம் மீண்டும் ஆரம்பித்து கெட்டம்பே பகுதியில் உள்ள பௌத்த விகாரையில் மத வழிபாட்டை முடித்துவிட்டு மீண்டும் தொடர்ந்து நடைபயணம் ஆரம்பித்து கம்பளையை அன்டிய பகுதியில் நேற்று இரவு தங்கி மீண்டும் நேற்று 5 ம் திகதி காலை 7.00 மணிக்கு தங்களது நடை பயணத்தை ஆரம்பித்தனர்.கம்பளை பகுதியில் ஆரம்பித்து நடைபயணம் உலப்பனை நாவலப்பிட்டி கினிக்கத்தேன நகருக்கு வந்து அங்கு உள்ள பௌத்த விகாரையில் நேற்று இரவு தங்கி இன்று காலை 5 மணிக்கு மீண்டும் கினிக்கத்தேன தியகல நோட்டன் கிரிவன்னெலிய மவுஸ்சாகலை நல்லதண்ணி நகரில் உள்ள நாகதீப பௌத்த விகாரையை சென்றடையும்.நாளைய தினம் 7 ம் திகதி அதிகாலை 2 மணிக்கு நல்லதண்ணி நாகதீப பௌத்த விகாரையில் இருந்து சிவனடி பாத மலைக்கு சென்று அங்கு தரிசனம் செய்த பின்னர் இரத்தினபுரி வழியாக பலாபத்தரவை சென்றடையும் என ஹந்தானை பௌத்த விகாரையை மதகுரு தெரிவித்தார்.தொடர்ந்து இரத்தினபுரி க்கு எதிர் வரும் 8 ம் திகதி சென்றடையும் எனவும் அன்றைய தினம் இரத்தினபுரியில் இலங்கை திரு நாட்டில் போதைப் பொருள் மற்றும் மது போன்றவற்றில் இருந்து தற்போது உள்ள நமது இளம் சமூதாயத்தை பாதுகாக்க விழிப்புணர்வு உரையினை நிகழ்த்த உள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement