• May 09 2026

விஜய் வீட்டின் முன் பரபரப்பு; மெட்டல் டிடெக்டர்கள் அகற்றம்! கதறி அழுத தொண்டர்

Chithra / May 7th 2026, 11:14 am
image

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, 108 ஆசனங்களை வென்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக விஜயின் இல்லத்திற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 


அவரது இல்லத்தின் இருபுறங்களிலும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டதுடன், மெட்டல் டிடெக்டர்களும் பொருத்தப்பட்டிருந்தன.


எனினும், நேற்று தமிழக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்த போதிலும், பெரும்பான்மையை நிரூபிக்கும் ஆதரவு கடிதங்கள் முழுமையாக சமர்ப்பிக்கப்படாததால், ஆளுநர் இதுவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


இதனிடையே, இன்று நடைபெறவிருந்த விஜயின் பதவியேற்பு விழா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த 4 பாதுகாப்பு வாகனங்களும், சுமார் 50 பொலிஸ் அதிகாரிகளும் மீளப் பெறப்பட்டுள்ளது. மேலும், அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர்களும் அகற்றப்பட்டுள்ளன.


இதேவேளை முதலமைச்சர் பதவியேற்பு இடம்பெறும் வரை, பாதுகாப்பு கென்வாய் வாகனங்களை  திரும்பப் பெறுமாறு விஜயே தன்னார்வமாக தெரிவித்ததாக  தமிழக வெற்றிக் கழகம் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. 


அது மாத்திரமன்றி, பெரும்பான்மையுடன் பதவியேற்ற பிறகே முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வ பாதுகாப்பை ஏற்றுக்கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அதேவேளை, விஜயின் இல்லம் முன்பு ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து திரண்டுவருகின்றனர். அங்கு மண்டியிட்டு  பிரார்த்தனை செய்த தொண்டர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு,


“அவர் நிச்சயமாக முதலமைச்சராக வருவார். எத்தனை தடைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு முன்னேறுவார். இவ்வளவு போராடி வந்த பிறகு இப்படியான நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது,” எனக் கூறி கதறி அழுதுள்ளார்.


இந்த சூழலில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், ஆட்சி அமைக்க தேவையான மேலதிக ஆதரவைப் பெறுவது, ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம், தற்போது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விஜய் வீட்டின் முன் பரபரப்பு; மெட்டல் டிடெக்டர்கள் அகற்றம் கதறி அழுத தொண்டர் தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, 108 ஆசனங்களை வென்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக விஜயின் இல்லத்திற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. அவரது இல்லத்தின் இருபுறங்களிலும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டதுடன், மெட்டல் டிடெக்டர்களும் பொருத்தப்பட்டிருந்தன.எனினும், நேற்று தமிழக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்த போதிலும், பெரும்பான்மையை நிரூபிக்கும் ஆதரவு கடிதங்கள் முழுமையாக சமர்ப்பிக்கப்படாததால், ஆளுநர் இதுவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.இதனிடையே, இன்று நடைபெறவிருந்த விஜயின் பதவியேற்பு விழா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த 4 பாதுகாப்பு வாகனங்களும், சுமார் 50 பொலிஸ் அதிகாரிகளும் மீளப் பெறப்பட்டுள்ளது. மேலும், அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர்களும் அகற்றப்பட்டுள்ளன.இதேவேளை முதலமைச்சர் பதவியேற்பு இடம்பெறும் வரை, பாதுகாப்பு கென்வாய் வாகனங்களை  திரும்பப் பெறுமாறு விஜயே தன்னார்வமாக தெரிவித்ததாக  தமிழக வெற்றிக் கழகம் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. அது மாத்திரமன்றி, பெரும்பான்மையுடன் பதவியேற்ற பிறகே முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வ பாதுகாப்பை ஏற்றுக்கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, விஜயின் இல்லம் முன்பு ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து திரண்டுவருகின்றனர். அங்கு மண்டியிட்டு  பிரார்த்தனை செய்த தொண்டர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு,“அவர் நிச்சயமாக முதலமைச்சராக வருவார். எத்தனை தடைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு முன்னேறுவார். இவ்வளவு போராடி வந்த பிறகு இப்படியான நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது,” எனக் கூறி கதறி அழுதுள்ளார்.இந்த சூழலில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், ஆட்சி அமைக்க தேவையான மேலதிக ஆதரவைப் பெறுவது, ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம், தற்போது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement