• May 18 2026

கிண்ணியாவில் வீதிகளில் திரியும் மாடுகள் பிடிப்பு ;உரிமையாளர்களுக்கு நகர சபை கடும் எச்சரிக்கை!

Ziya / Jan 7th 2026, 4:02 pm
image

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக வீதிகளில் சுற்றித் திரிந்த ஒரு தொகுதி மாடுகள் இன்று (07) நகர சபையினரால் பிடிக்கப்பட்டு, நகர சபை மைதானத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

பிடிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் உடனடியாக நகர சபைக்கு வருகை தந்து, உரிய தண்டப்பணத்தைச் செலுத்தி தமது கால்நடைகளை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து நகர சபை விடுத்துள்ள விசேட அறிவிப்பின் படி,

நகரப்பகுதிகளிலும் பிரதான வீதிகளிலும் மாடுகளைக் கைவிடுவதனால் விபத்துக்கள் ஏற்படுவதுடன் பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தங்களது மாடுகளை வீதிகளில் விடுகின்ற பட்சத்தில், எவ்வித முன்னறிவித்தலும் இன்றி உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்வதற்குரிய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

எனவே, கால்நடை வளர்ப்பாளர்கள் பொறுப்புடன் செயற்படுமாறும், வீதிகளில் மாடுகள் உலாவுவதைத் தவிர்க்குமாறும் நகர சபை கேட்டுக்கொண்டுள்ளது.

கிண்ணியாவில் வீதிகளில் திரியும் மாடுகள் பிடிப்பு ;உரிமையாளர்களுக்கு நகர சபை கடும் எச்சரிக்கை பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக வீதிகளில் சுற்றித் திரிந்த ஒரு தொகுதி மாடுகள் இன்று (07) நகர சபையினரால் பிடிக்கப்பட்டு, நகர சபை மைதானத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.பிடிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் உடனடியாக நகர சபைக்கு வருகை தந்து, உரிய தண்டப்பணத்தைச் செலுத்தி தமது கால்நடைகளை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து நகர சபை விடுத்துள்ள விசேட அறிவிப்பின் படி,நகரப்பகுதிகளிலும் பிரதான வீதிகளிலும் மாடுகளைக் கைவிடுவதனால் விபத்துக்கள் ஏற்படுவதுடன் பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.மீண்டும் தங்களது மாடுகளை வீதிகளில் விடுகின்ற பட்சத்தில், எவ்வித முன்னறிவித்தலும் இன்றி உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்வதற்குரிய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.எனவே, கால்நடை வளர்ப்பாளர்கள் பொறுப்புடன் செயற்படுமாறும், வீதிகளில் மாடுகள் உலாவுவதைத் தவிர்க்குமாறும் நகர சபை கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement