பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள் உள்ளிட்ட பணியாளர்களிடம் எழுமாற்றான போதைப்பொருள் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக, சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் மேலும் ஒரு நடமாடும் பரிசோதனைப் பேருந்து, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசியத் திட்டத்தின் இரண்டாண்டு மூலோபாயத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இதன் மூலம் நடமாடும் போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் சாரதி உதவியாளர்கள் வாகனம் செலுத்தும் போது போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதை கண்டறியும் வகையில் இந்த எழுமாற்றான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது நாட்டின் ஐந்து மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் இந்தப் பரிசோதனைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேவையான பௌதிக மற்றும் மனித வளங்களை படிப்படியாக மேம்படுத்தி, நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கும் இந்தப் பரிசோதனை நடவடிக்கைகளை விரிவுபடுத்த தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
போக்குவரத்து பாதுகாப்பை உறுதிசெய்து, உயிர்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த தேசிய எழுமாற்றான போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்தின் கீழ் இதுவரை 7,150 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமைச்சுக்களுக்கிடையிலான ஒத்துழைப்புடன் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால திட்டங்களின் ஊடாக நாட்டில் வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் சொத்து இழப்புகளைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்திற்காக நடமாடும் பேருந்து பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள் உள்ளிட்ட பணியாளர்களிடம் எழுமாற்றான போதைப்பொருள் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக, சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் மேலும் ஒரு நடமாடும் பரிசோதனைப் பேருந்து, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசியத் திட்டத்தின் இரண்டாண்டு மூலோபாயத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.இதன் மூலம் நடமாடும் போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் சாரதி உதவியாளர்கள் வாகனம் செலுத்தும் போது போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதை கண்டறியும் வகையில் இந்த எழுமாற்றான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தற்போது நாட்டின் ஐந்து மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் இந்தப் பரிசோதனைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தேவையான பௌதிக மற்றும் மனித வளங்களை படிப்படியாக மேம்படுத்தி, நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கும் இந்தப் பரிசோதனை நடவடிக்கைகளை விரிவுபடுத்த தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.போக்குவரத்து பாதுகாப்பை உறுதிசெய்து, உயிர்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த தேசிய எழுமாற்றான போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்தின் கீழ் இதுவரை 7,150 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அமைச்சுக்களுக்கிடையிலான ஒத்துழைப்புடன் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால திட்டங்களின் ஊடாக நாட்டில் வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் சொத்து இழப்புகளைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.