யாழ்ப்பாணம் – குருநகர் கடற்கரைப் பகுதியில் இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 200 கிலோ கிராம் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குருநகர் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
கஞ்சாவுடன் கைப்பற்றப்பட்ட படகை அடிப்படையாகக் கொண்டு தப்பிச் சென்ற கடத்தல்காரர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட சுமார் 200 கிலோ கிராம் கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநகர் கடற்கரையில் 200 கிலோ கஞ்சா மீட்பு தப்பியோடிய கடத்தல்காரர்கள் யாழ்ப்பாணம் – குருநகர் கடற்கரைப் பகுதியில் இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 200 கிலோ கிராம் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குருநகர் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.இதன்போது, கடற்படையினரைக் கண்டதும் சந்தேகநபர்கள் கஞ்சா பொதிகளையும் படகையும் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கஞ்சாவுடன் கைப்பற்றப்பட்ட படகை அடிப்படையாகக் கொண்டு தப்பிச் சென்ற கடத்தல்காரர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், கைப்பற்றப்பட்ட சுமார் 200 கிலோ கிராம் கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.