• May 17 2026

சஞ்சீவ கொலை வழக்கு;சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Ziya / Jan 7th 2026, 3:46 pm
image

பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை ஜனவரி 09 வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த வழக்கின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி என்பவருக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை மற்றும் தங்குமிட வசதி ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றுமொரு சந்தேக நபர், இதற்கு முன்னர் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.


தடுப்புக் காவல் காலம் நிறைவடைந்ததை அடுத்து, இன்று (07) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், இரு சந்தேக நபர்களையும் கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலைப்படுத்தினர்.


இதனையடுத்து, சந்தேகநபர்களை ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கும் நீதவான் உத்தரவிட்டார்.


சஞ்சீவ கொலை வழக்கு;சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை ஜனவரி 09 வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி என்பவருக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை மற்றும் தங்குமிட வசதி ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றுமொரு சந்தேக நபர், இதற்கு முன்னர் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.தடுப்புக் காவல் காலம் நிறைவடைந்ததை அடுத்து, இன்று (07) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், இரு சந்தேக நபர்களையும் கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலைப்படுத்தினர்.இதனையடுத்து, சந்தேகநபர்களை ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கும் நீதவான் உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement