• Aug 11 2026

கஞ்சா கடத்திய தம்பதியினர் கைது – நாடளாவிய பொலிஸ் நடவடிக்கையில் பலர் கைதுகள்

Chithra / Aug 10th 2026, 3:19 pm
image


புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் பத்துளுஓயா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் வீதித் தடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, கெப் ரக வாகனத்தில் பெருமளவிலான கஞ்சாவைக் கடத்திச் சென்ற தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின்போது, குறித்த வாகனத்தில் இருந்து 17 கிலோ 985 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்டவர்கள் இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கணவனும், 22 வயதுடைய அவரது மனைவியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஆரம்பகட்ட விசாரணைகளில், கைப்பற்றப்பட்ட கஞ்சா தனமல்வில பகுதியில் பயிரிடப்பட்டு, அங்கிருந்து கடத்தி வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று (10) திங்கட்கிழமை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இதேவேளை, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் சுமார் 25,482 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


இதன்போது, பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட 461 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 20 பேர் குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களில் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 231 பேரும், திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 116 பேரும் அடங்குகின்றனர்.


மேலும், குடிபோதையில் வாகனம் செலுத்திய 78 சாரதிகளும், பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்திய சம்பவங்களுடன் தொடர்புடைய 89 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


போக்குவரத்து சட்டங்களை மீறியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுக்காக மொத்தம் 3,917 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மற்றுமொரு சம்பவத்தில், பாணந்துறை – மோதரவில தொடர்மாடி குடியிருப்பில் சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபரிடமிருந்து 810 சட்டவிரோத போதை மாத்திரைகளும் இரண்டு வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுவின் உறுப்பினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேகநபரும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கஞ்சா கடத்திய தம்பதியினர் கைது – நாடளாவிய பொலிஸ் நடவடிக்கையில் பலர் கைதுகள் புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் பத்துளுஓயா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் வீதித் தடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, கெப் ரக வாகனத்தில் பெருமளவிலான கஞ்சாவைக் கடத்திச் சென்ற தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின்போது, குறித்த வாகனத்தில் இருந்து 17 கிலோ 985 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்கள் இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கணவனும், 22 வயதுடைய அவரது மனைவியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஆரம்பகட்ட விசாரணைகளில், கைப்பற்றப்பட்ட கஞ்சா தனமல்வில பகுதியில் பயிரிடப்பட்டு, அங்கிருந்து கடத்தி வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று (10) திங்கட்கிழமை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இதேவேளை, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் சுமார் 25,482 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.இதன்போது, பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட 461 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 20 பேர் குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 231 பேரும், திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 116 பேரும் அடங்குகின்றனர்.மேலும், குடிபோதையில் வாகனம் செலுத்திய 78 சாரதிகளும், பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்திய சம்பவங்களுடன் தொடர்புடைய 89 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.போக்குவரத்து சட்டங்களை மீறியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுக்காக மொத்தம் 3,917 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மற்றுமொரு சம்பவத்தில், பாணந்துறை – மோதரவில தொடர்மாடி குடியிருப்பில் சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரிடமிருந்து 810 சட்டவிரோத போதை மாத்திரைகளும் இரண்டு வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுவின் உறுப்பினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபரும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement