2019ஆம் ஆண்டு புத்தளம், வண்ணாத்தவில்லு – லக்டோஸ் தோட்டப் பகுதியில் உள்ள காணியொன்றில் சட்டவிரோதமாக துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தமை தொடர்பான வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு தலா 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்றம் இன்று (07) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
லால் பண்டார, நயோமி விக்ரமசேகர மற்றும் ரஷ்மி சிங்கப்புலி ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதிகள் இருவரும் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிபதிகள் குழாம் தலா 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், சஹ்ரான் ஹாசீம் உள்ளிட்டவர்களுடன் இணைந்து வண்ணாத்தவில்லு, லக்டோஸ் தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை களஞ்சியப்படுத்தியதாக குறித்த இருவருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
குறித்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் இருவருக்கும் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வண்ணாத்தவில்லு ஆயுதப் பதுக்கல்: சஹ்ரானின் சகாக்கள் இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை 2019ஆம் ஆண்டு புத்தளம், வண்ணாத்தவில்லு – லக்டோஸ் தோட்டப் பகுதியில் உள்ள காணியொன்றில் சட்டவிரோதமாக துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தமை தொடர்பான வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு தலா 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்றம் இன்று (07) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.லால் பண்டார, நயோமி விக்ரமசேகர மற்றும் ரஷ்மி சிங்கப்புலி ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, பிரதிவாதிகள் இருவரும் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிபதிகள் குழாம் தலா 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், சஹ்ரான் ஹாசீம் உள்ளிட்டவர்களுடன் இணைந்து வண்ணாத்தவில்லு, லக்டோஸ் தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை களஞ்சியப்படுத்தியதாக குறித்த இருவருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.குறித்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் இருவருக்கும் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.