• Oct 06 2026

எரிபொருள் விநியோகத்தை குறைத்த தனியார் நிறுவனங்கள் – சபையில் அமைச்சர் வெளியிட்ட காரணம்

Chithra / Oct 6th 2026, 1:23 pm
image


சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், தனியார் எரிபொருள் நிறுவனங்கள் உள்நாட்டுச் சந்தைக்கான விநியோகத்தை குறைத்துள்ளமையே தற்போதைய எரிபொருள் வரிசைகளுக்கு முக்கிய காரணம் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், தற்போதைய உள்நாட்டு விலையில் எரிபொருளை விற்பனை செய்வது சிரமமாக இருப்பதாக தனியார் விநியோகஸ்தர்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.


இதன் காரணமாக தனியார் நிறுவனங்கள் சந்தைக்கு வழங்கும் எரிபொருளின் அளவை குறைத்துள்ளதாகவும், இதனால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) மீது கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


மத்திய கிழக்கின் நிலைமை சர்வதேச எரிபொருள் சந்தையை பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அண்மைக்காலத்தில் சர்வதேச சந்தையில் டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


தனியார் நிறுவனங்களின் விநியோகக் குறைபாட்டை ஈடுசெய்யும் வகையில், பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் சந்தைக்கு விநியோகிக்கும் எரிபொருளின் அளவை CPC அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.


எவ்வாறாயினும், தனியார் எரிபொருள் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் மூலம், ஒவ்வொரு தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் குறிப்பிட்ட அளவு எரிபொருளை கட்டாயமாக விநியோகிக்குமாறு உத்தரவிடும் அதிகாரம் அரசாங்கத்திற்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


அதேவேளை, நாட்டில் குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை பராமரிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தால் அறிவுறுத்த முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.


தேவையான குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை பராமரிக்கத் தவறிய நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும், சந்தையில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.


தனியார் நிறுவனங்களின் விநியோகக் குறைப்பு மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட இயல்பான ஏற்ற இறக்கங்கள் காரணமாக கடந்த சில நாட்களாக நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிபொருள் விநியோகத்தை குறைத்த தனியார் நிறுவனங்கள் – சபையில் அமைச்சர் வெளியிட்ட காரணம் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், தனியார் எரிபொருள் நிறுவனங்கள் உள்நாட்டுச் சந்தைக்கான விநியோகத்தை குறைத்துள்ளமையே தற்போதைய எரிபொருள் வரிசைகளுக்கு முக்கிய காரணம் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், தற்போதைய உள்நாட்டு விலையில் எரிபொருளை விற்பனை செய்வது சிரமமாக இருப்பதாக தனியார் விநியோகஸ்தர்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.இதன் காரணமாக தனியார் நிறுவனங்கள் சந்தைக்கு வழங்கும் எரிபொருளின் அளவை குறைத்துள்ளதாகவும், இதனால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) மீது கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.மத்திய கிழக்கின் நிலைமை சர்வதேச எரிபொருள் சந்தையை பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அண்மைக்காலத்தில் சர்வதேச சந்தையில் டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.தனியார் நிறுவனங்களின் விநியோகக் குறைபாட்டை ஈடுசெய்யும் வகையில், பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் சந்தைக்கு விநியோகிக்கும் எரிபொருளின் அளவை CPC அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.எவ்வாறாயினும், தனியார் எரிபொருள் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் மூலம், ஒவ்வொரு தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் குறிப்பிட்ட அளவு எரிபொருளை கட்டாயமாக விநியோகிக்குமாறு உத்தரவிடும் அதிகாரம் அரசாங்கத்திற்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.அதேவேளை, நாட்டில் குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை பராமரிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தால் அறிவுறுத்த முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.தேவையான குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை பராமரிக்கத் தவறிய நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும், சந்தையில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.தனியார் நிறுவனங்களின் விநியோகக் குறைப்பு மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட இயல்பான ஏற்ற இறக்கங்கள் காரணமாக கடந்த சில நாட்களாக நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement