• Apr 21 2026

பொலித்தீன் பாவனைக்கு தடை...! மன்னார் பொது வைத்தியசாலையின் அதிரடி நடவடிக்கை...!samugammedia

Ziya / Jan 29th 2024, 2:32 pm
image

மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலை வளாகத்தினுள் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலை சூழல் மற்றும் பொது இடங்களில் அதிகரித்துவரும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையால் சூழல் மாசடைவதையும் அதேநேரம் மழை காலங்களில் சிதறிக்கிடக்கும் பொலித்தீன் பைகளில் இருந்து டெங்கு நுளம்பு பரவல் அதிகரித்து காணப்படுவதன் அடிப்படையிலும் மன்னார் வைத்திய சாலையில் முதல் கட்டமாக பொலித்தீன் பைகளின் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக சிகிச்சைக்காக வருபவர்கள், நோயாளர்களை பார்வையிட வருபவர்கள் பொலித்தீன் பைகளுக்கு பதிலாக உக்ககக் கூடிய அல்லது மீள் பயன்படுத்த கூடிய பைகளை கொண்டுவருமாரு வைத்தியசாலை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதே நேரம் பொலிதீன் பைகளுடன் வருபவர்களிடம் இருந்து பொலித்தீன் பைகள் வாங்கப்பட்டு மாற்றீட்டு பைகள் தற்காலிகமாக வைத்தியசாலை நிர்வாகத்தினரால் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொலித்தீன் பாவனைக்கு தடை. மன்னார் பொது வைத்தியசாலையின் அதிரடி நடவடிக்கை.samugammedia மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலை வளாகத்தினுள் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.மன்னார் வைத்தியசாலை சூழல் மற்றும் பொது இடங்களில் அதிகரித்துவரும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையால் சூழல் மாசடைவதையும் அதேநேரம் மழை காலங்களில் சிதறிக்கிடக்கும் பொலித்தீன் பைகளில் இருந்து டெங்கு நுளம்பு பரவல் அதிகரித்து காணப்படுவதன் அடிப்படையிலும் மன்னார் வைத்திய சாலையில் முதல் கட்டமாக பொலித்தீன் பைகளின் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக சிகிச்சைக்காக வருபவர்கள், நோயாளர்களை பார்வையிட வருபவர்கள் பொலித்தீன் பைகளுக்கு பதிலாக உக்ககக் கூடிய அல்லது மீள் பயன்படுத்த கூடிய பைகளை கொண்டுவருமாரு வைத்தியசாலை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.அதே நேரம் பொலிதீன் பைகளுடன் வருபவர்களிடம் இருந்து பொலித்தீன் பைகள் வாங்கப்பட்டு மாற்றீட்டு பைகள் தற்காலிகமாக வைத்தியசாலை நிர்வாகத்தினரால் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement