• Jun 18 2026

சட்டவிரோத வழிகளில் குவிக்கப்பட்டபல கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம்!- பொலிஸாரின் அதிரடி வேட்டை

Chithra / Jun 18th 2026, 7:42 am
image


சட்டவிரோத மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாகக் கருதப்படும் பல கோடி ரூபா பெறுமதியுடைய சொத்துக்களை முடக்குவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மற்றும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் ஆகியன மேற்கொண்ட இரு வேறு விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


படபொல, உடுமுல்ல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சட்டவிரோதமான வழிகளில் பணம் சம்பாதிப்பதாகக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய முதலாவது விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.


இதன்போது, மேற்படி சந்தேகநபரின் மனைவியின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த சொத்துக்கள் அனைத்தும் சட்டவிரோத வருமானத்தின் மூலம் பெறப்பட்டவை என்பதைப் புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.


முடக்கப்பட்ட சொத்துக்களின் விவரங்கள் வருமாறு:-


* சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 4.5 ஏக்கர் காணி.

* சுமார் 5 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 54 பேர்ச் காணி.

* சுமார் 30 மில்லியன் ரூபா மதிப்பீட்டைக் கொண்ட இரண்டு மாடி வீடு.


பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஜூன் 17ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 7 நாள்களுக்கு இந்தச் சொத்துக்களை முடக்குவதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.


மற்றொரு சம்பவத்தில், பேலியகொட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய வருமானத்தில் பெருமளவிலான சொத்துக்களைச் சேர்த்துள்ளதை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் கண்டுபிடித்தது.


அவர் போதைப்பொருள் மூலம் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி, கட்டுவாவல பகுதியில் 10 பேர்ச் காணியைக் கொள்வனவு செய்து, அதில் சொகுசான இரண்டு மாடி வீடு ஒன்றைக் கட்டியெழுப்பியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


மேற்படி பெண் கடந்த மே மாதம் 21ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, வரும் ஜூன் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இவருக்குச் சொந்தமான கட்டுவாவல சொத்துக்களும் பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜூன் 17ஆம் திகதி முதல் 7 நாள்களுக்குப் பொலிஸாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சட்டவிரோத வழிகளில் குவிக்கப்பட்டபல கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம்- பொலிஸாரின் அதிரடி வேட்டை சட்டவிரோத மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாகக் கருதப்படும் பல கோடி ரூபா பெறுமதியுடைய சொத்துக்களை முடக்குவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மற்றும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் ஆகியன மேற்கொண்ட இரு வேறு விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.படபொல, உடுமுல்ல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சட்டவிரோதமான வழிகளில் பணம் சம்பாதிப்பதாகக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய முதலாவது விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.இதன்போது, மேற்படி சந்தேகநபரின் மனைவியின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த சொத்துக்கள் அனைத்தும் சட்டவிரோத வருமானத்தின் மூலம் பெறப்பட்டவை என்பதைப் புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.முடக்கப்பட்ட சொத்துக்களின் விவரங்கள் வருமாறு:-* சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 4.5 ஏக்கர் காணி.* சுமார் 5 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 54 பேர்ச் காணி.* சுமார் 30 மில்லியன் ரூபா மதிப்பீட்டைக் கொண்ட இரண்டு மாடி வீடு.பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஜூன் 17ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 7 நாள்களுக்கு இந்தச் சொத்துக்களை முடக்குவதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.மற்றொரு சம்பவத்தில், பேலியகொட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய வருமானத்தில் பெருமளவிலான சொத்துக்களைச் சேர்த்துள்ளதை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் கண்டுபிடித்தது.அவர் போதைப்பொருள் மூலம் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி, கட்டுவாவல பகுதியில் 10 பேர்ச் காணியைக் கொள்வனவு செய்து, அதில் சொகுசான இரண்டு மாடி வீடு ஒன்றைக் கட்டியெழுப்பியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மேற்படி பெண் கடந்த மே மாதம் 21ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, வரும் ஜூன் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இவருக்குச் சொந்தமான கட்டுவாவல சொத்துக்களும் பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜூன் 17ஆம் திகதி முதல் 7 நாள்களுக்குப் பொலிஸாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement