ஆசிய 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான தடகளப் போட்டித் தொடரின் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைப் பெண் தங்கம் வென்று சாதனை ஈட்டிக்கொடுத்துள்ளார்.
ஹொங்கொங்கில் நடைபெற்று வரும் இந்த தொடரில், தடகளப் போட்டியில் கலந்துகொண்ட குறித்த பெண், 04 நிமிடங்களும் 31 தசம் 41 வினாடிகளில் (04:31.41) போட்டித் தூரத்தைக் கடந்து இந்த வெற்றியைத் தனதாக்கிக் கொண்டார்.
இதேவேளை, ஆசிய 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகளப் போட்டித் தொடரின் ஆண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் விதுஷன் ராஜேந்திரன் 6ஆம் இடத்தை இடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிய தடகளப் போட்டி - தங்கம் வென்று இலங்கைப் பெண் சாதனை ஆசிய 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான தடகளப் போட்டித் தொடரின் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைப் பெண் தங்கம் வென்று சாதனை ஈட்டிக்கொடுத்துள்ளார். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தருஷி அபிஷேகா என்பவரே தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார். ஹொங்கொங்கில் நடைபெற்று வரும் இந்த தொடரில், தடகளப் போட்டியில் கலந்துகொண்ட குறித்த பெண், 04 நிமிடங்களும் 31 தசம் 41 வினாடிகளில் (04:31.41) போட்டித் தூரத்தைக் கடந்து இந்த வெற்றியைத் தனதாக்கிக் கொண்டார். இப்போட்டியின் வெள்ளிப் பதக்கத்தை ஈரானின் வீராங்கனையும், வெண்கலப் பதக்கத்தை கொரியாவின் வீராங்கனையும் பெற்றுக்கொண்டனர். இதேவேளை, ஆசிய 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகளப் போட்டித் தொடரின் ஆண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் விதுஷன் ராஜேந்திரன் 6ஆம் இடத்தை இடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.