யாழ்ப்பாணம் - இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகே முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுதுமலை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை இணுவில் பகுதியில் சடலமாக காணப்பட்டார். இது குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
தகவலையடுத்து சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இன்று காலை பருத்தித்துறைக் கடற்கரைப் பகுதியிலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
யாழில் அடுத்தடுத்து சடலம் மீட்கப்பட்டதால் மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இணுவில் பகுதியில் மற்றுமொரு சடலம் - யாழில் அடுத்தடுத்து மீட்கப்பட்டதால் பதற்றம் யாழ்ப்பாணம் - இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகே முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுதுமலை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் இன்று காலை இணுவில் பகுதியில் சடலமாக காணப்பட்டார். இது குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலையடுத்து சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை இன்று காலை பருத்தித்துறைக் கடற்கரைப் பகுதியிலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். யாழில் அடுத்தடுத்து சடலம் மீட்கப்பட்டதால் மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.