• Apr 20 2026

வேனும் முச்சக்கர வண்டியும்நேருக்குநேர் மோதி கோர விபத்து! பறிபோன உயிர் - பெண் காயம்

Chithra / Nov 18th 2025, 12:02 pm
image

பொல்பிட்டிய யடிபேலிய பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து வட்டகொட நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும், ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வேனும் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை – பொல்பிட்டிய யடிபேலிய பகுதியில்,  நேருக்கு நேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பொரளையைச் சேர்ந்த 53 வயதான எச்.எம்.இந்திக பிரியகுமார என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

அவர் காயமடைந்த நிலையில் கிதுல்கல தலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முச்சக்கர வண்டியின் பின்புற இருக்கையில் இருந்த ஒரு பெண்ணும் காயமடைந்து தலிகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதிக வேகத்தில் சென்ற முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் முச்சக்கர வண்டியும் வேனும் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், வேன் சாரதி சந்தேகநபராக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிட்டிய போக்குவரத்துப் பிரிவு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

 


வேனும் முச்சக்கர வண்டியும்நேருக்குநேர் மோதி கோர விபத்து பறிபோன உயிர் - பெண் காயம் பொல்பிட்டிய யடிபேலிய பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பிலிருந்து வட்டகொட நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும், ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வேனும் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை – பொல்பிட்டிய யடிபேலிய பகுதியில்,  நேருக்கு நேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர் பொரளையைச் சேர்ந்த 53 வயதான எச்.எம்.இந்திக பிரியகுமார என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் காயமடைந்த நிலையில் கிதுல்கல தலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முச்சக்கர வண்டியின் பின்புற இருக்கையில் இருந்த ஒரு பெண்ணும் காயமடைந்து தலிகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.அதிக வேகத்தில் சென்ற முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.விபத்தில் முச்சக்கர வண்டியும் வேனும் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், வேன் சாரதி சந்தேகநபராக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிட்டிய போக்குவரத்துப் பிரிவு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

Advertisement

Advertisement

Advertisement