இத்தாலியை மையமாகக் கொண்டு இலங்கையில் உள்ள பிரபல வர்த்தகர்களை இலக்காக வைத்து முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பாரிய கொக்கைன் கடத்தல் வலையமைப்பு தொடர்பில், பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) அதிகாரிகள் முக்கிய தகவல்களை கண்டுபிடித்துள்ளனர்.
சீதுவை பகுதியில் உள்ள பிரபல உணவகமொன்றின் வாகன நிறுத்துமிடத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சுமார் 500 கிராம் கொக்கைனுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கொக்கைனின் பெறுமதி சுமார் 20 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கட்டானை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த 45 மற்றும் 25 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின்போது, இத்தாலியில் வசிக்கும் ‘தினேஷ்’ என அடையாளம் காணப்பட்ட வர்த்தகர் ஒருவர் குறித்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை வழிநடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வானூர்தி நிலையம் ஊடாக கொக்கைனை இலங்கைக்கு கொண்டு வந்த பின்னர், கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உயர்தர உணவகங்களின் வாகன நிறுத்துமிடங்களில் வைத்து பிரபல வர்த்தகர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரின் வங்கிக் கணக்கின் ஊடாக மாத்திரம் 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்ட பணம் 30-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டு, பின்னர் சட்டவிரோத பணச் சலவை நடவடிக்கைகள் மூலம் முறையான வர்த்தகப் பரிவர்த்தனைகள் போன்று காண்பிக்கப்பட்டு இத்தாலிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த நிதிப் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய 25 வங்கிக் கணக்குகள் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியை மையமாகக் கொண்ட கொக்கைன் வலையமைப்பில் புதிய திருப்பம் - 25 வங்கிக் கணக்குகள் விசாரணையில் இத்தாலியை மையமாகக் கொண்டு இலங்கையில் உள்ள பிரபல வர்த்தகர்களை இலக்காக வைத்து முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பாரிய கொக்கைன் கடத்தல் வலையமைப்பு தொடர்பில், பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) அதிகாரிகள் முக்கிய தகவல்களை கண்டுபிடித்துள்ளனர்.சீதுவை பகுதியில் உள்ள பிரபல உணவகமொன்றின் வாகன நிறுத்துமிடத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சுமார் 500 கிராம் கொக்கைனுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைப்பற்றப்பட்ட கொக்கைனின் பெறுமதி சுமார் 20 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்கள் கட்டானை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த 45 மற்றும் 25 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விசாரணைகளின்போது, இத்தாலியில் வசிக்கும் ‘தினேஷ்’ என அடையாளம் காணப்பட்ட வர்த்தகர் ஒருவர் குறித்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை வழிநடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வானூர்தி நிலையம் ஊடாக கொக்கைனை இலங்கைக்கு கொண்டு வந்த பின்னர், கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உயர்தர உணவகங்களின் வாகன நிறுத்துமிடங்களில் வைத்து பிரபல வர்த்தகர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், இந்த கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரின் வங்கிக் கணக்கின் ஊடாக மாத்திரம் 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்ட பணம் 30-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டு, பின்னர் சட்டவிரோத பணச் சலவை நடவடிக்கைகள் மூலம் முறையான வர்த்தகப் பரிவர்த்தனைகள் போன்று காண்பிக்கப்பட்டு இத்தாலிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இதனையடுத்து, குறித்த நிதிப் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய 25 வங்கிக் கணக்குகள் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.