• May 03 2026

விமானம் தரையிறங்கியபோது இறக்கையால் ஏற்பட்ட விபரீதம்!

shanu / May 2nd 2026, 3:24 pm
image

விமானமொன்று தரையிறங்கிய போது தனது இடது இறக்கையால் அங்கிருந்த ஜெட் பிரிட்ஜ் மீது மோதி விபத்து சம்பவதித்துள்ளது. 


இந்த விபத்து ஷாங்காய் ஹாங்கியாவோ சர்வதேச விமான நிலையத்தில் இன்று பதிவாகியுள்ளது. 


சீனாவின்  ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் A350-941 ரக விமானம் ஒன்றே  ஜெட் பிரிட்ஜ் மீது மோதி விபத்திற்குள்ளானது. 


ஷாங்காய் ஹாங்கியாவோ சர்வதேச விமான நிலையத்தில், தரையிறங்கிய குறித்த விமானம்  நுழைவாயிலில் நிலைநிறுத்துவதற்காகச் சென்றுகொண்டிருந்தது. 


இதன்போதே  தனது இடது இறக்கையால்  ஜெட் பிரிட்ஜ் மீது மோதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


விபத்தில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் தகவல் வெளியாகாத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

விமானம் தரையிறங்கியபோது இறக்கையால் ஏற்பட்ட விபரீதம் விமானமொன்று தரையிறங்கிய போது தனது இடது இறக்கையால் அங்கிருந்த ஜெட் பிரிட்ஜ் மீது மோதி விபத்து சம்பவதித்துள்ளது. இந்த விபத்து ஷாங்காய் ஹாங்கியாவோ சர்வதேச விமான நிலையத்தில் இன்று பதிவாகியுள்ளது. சீனாவின்  ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் A350-941 ரக விமானம் ஒன்றே  ஜெட் பிரிட்ஜ் மீது மோதி விபத்திற்குள்ளானது. ஷாங்காய் ஹாங்கியாவோ சர்வதேச விமான நிலையத்தில், தரையிறங்கிய குறித்த விமானம்  நுழைவாயிலில் நிலைநிறுத்துவதற்காகச் சென்றுகொண்டிருந்தது. இதன்போதே  தனது இடது இறக்கையால்  ஜெட் பிரிட்ஜ் மீது மோதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்தில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் தகவல் வெளியாகாத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement