• Oct 20 2026

கொலையில் முடிந்த திருமணத் தகராறு

Ziya / Oct 19th 2026, 1:55 pm
image


இந்தியாவின் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள பாம்புலா அணைக்கட்டுப் பகுதியில், உடல் எரிந்த நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி மீட்கப்பட்டது. 


பொலிஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த நித்யா என அடையாளம் காணப்பட்டார்.


தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், நித்யாவும் இடுக்கி மாவட்டம் ராஜாக்காடு அருகேயுள்ள கஜானாபாறை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய நிஷாந்தும் காதலித்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. 


சந்தேகத்தின் அடிப்படையில் நிஷாந்தைக் கைது செய்து விசாரித்த பொலிஸார், திருமணம் தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறே கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.


பொலிஸாரின் கூற்றுப்படி, ஒக்டோபர் 12ஆம் திகதி போடியிலிருந்து இடுக்கிக்குச் சென்ற நித்யாவை, நிஷாந்த் தனது ஆட்டோவில் பாம்புலா அணைக்கட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது நித்யாவின் கழுத்தை நெரித்ததுடன், அவர் மயங்கிய பின்னர் தலையில் கல்லைப் போட்டதாகவும், தொடர்ந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


மேலும், இருவரும் காதலித்து வந்த காலத்தில் நிஷாந்த் நித்யாவைத் துன்புறுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

கொலையில் முடிந்த திருமணத் தகராறு இந்தியாவின் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள பாம்புலா அணைக்கட்டுப் பகுதியில், உடல் எரிந்த நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி மீட்கப்பட்டது. பொலிஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த நித்யா என அடையாளம் காணப்பட்டார்.தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், நித்யாவும் இடுக்கி மாவட்டம் ராஜாக்காடு அருகேயுள்ள கஜானாபாறை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய நிஷாந்தும் காதலித்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் நிஷாந்தைக் கைது செய்து விசாரித்த பொலிஸார், திருமணம் தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறே கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.பொலிஸாரின் கூற்றுப்படி, ஒக்டோபர் 12ஆம் திகதி போடியிலிருந்து இடுக்கிக்குச் சென்ற நித்யாவை, நிஷாந்த் தனது ஆட்டோவில் பாம்புலா அணைக்கட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது நித்யாவின் கழுத்தை நெரித்ததுடன், அவர் மயங்கிய பின்னர் தலையில் கல்லைப் போட்டதாகவும், தொடர்ந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும், இருவரும் காதலித்து வந்த காலத்தில் நிஷாந்த் நித்யாவைத் துன்புறுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

Advertisement

Advertisement

Advertisement