• Jun 24 2026

யாழ். விமான நிலையத்தில் நடராஜர் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம்

Chithra / Jun 23rd 2026, 7:32 pm
image


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை விரைவில் பிரதிஷ்டை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவரான சி.வீ.கே. சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகருக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


அந்தக் கடிதத்தில், அண்மையில் நடைபெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது,  யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலை இதுவரை நிறுவப்படாமல் இருப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே, இந்த விடயத்தில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபரும் தலையீடு செய்து, விமான நிலைய வளாகத்தில் நடராஜர் சிலையை உரிய இடத்தில் நிறுவுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என சி.வீ.கே. சிவஞானம் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

 

யாழ். விமான நிலையத்தில் நடராஜர் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை விரைவில் பிரதிஷ்டை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவரான சி.வீ.கே. சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகருக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அந்தக் கடிதத்தில், அண்மையில் நடைபெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது,  யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலை இதுவரை நிறுவப்படாமல் இருப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே, இந்த விடயத்தில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபரும் தலையீடு செய்து, விமான நிலைய வளாகத்தில் நடராஜர் சிலையை உரிய இடத்தில் நிறுவுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என சி.வீ.கே. சிவஞானம் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement