• Oct 17 2026

46,000 ஆசிரியர் வெற்றிடங்கள்! நியமனம் 17,000 பேருக்கு மட்டுமா? பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பில் பாரிய குழப்பம்

Chithra / Oct 16th 2026, 10:34 am
image


நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் பாரிய குறைபாடுகளும் குழப்பங்களும் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.


கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


நாட்டின் பாடசாலைகளில் சுமார் 46,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படும் நிலையில், முதற்கட்டமாக 23,000 ஆசிரியர்களை மாத்திரம் ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதற்காக சுமார் ஒரு இலட்சத்து 29 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், குறித்த போட்டிப் பரீட்சையின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.


எனினும், விண்ணப்பதாரர்கள் பல்வேறு பாடங்களுக்கு விண்ணப்பித்துள்ளதால், அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதன் காரணமாக எவ்வித சட்டச் சிக்கல்களும் இல்லாத சுமார் 17,000 பேருக்கு மாத்திரமே எதிர்வரும் ஜனவரி மாதத்தில் முதற்கட்ட ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும், ஏனையோருக்குப் படிப்படியாக நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கல்வி அமைச்சின் முறையான திட்டமிடலின்மையே மாகாண மற்றும் வலய மட்டங்களில் இவ்வாறான குழப்பங்கள் ஏற்படுவதற்குக் காரணம் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு முன்னரே இவ்வாறான நடைமுறைச் சிக்கல்களைக் கண்டறிந்து தீர்வு வழங்கியிருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதனிடையே, அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் நியமனங்களுக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.


அரச பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படாத நிலையில், தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கும் அரச ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


பணம் செலுத்திப் பட்டம் பெற்றவர்கள் அரச சேவைக்குள் உள்வாங்கப்படும் அதேவேளை, இலவசக் கல்வியின் மூலம் பட்டம் பெற்றவர்கள் புறக்கணிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடு எனவும் அவர் விமர்சித்துள்ளார்.


இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் இலவசக் கல்வி முறைமையின் முக்கியத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


46,000 ஆசிரியர் வெற்றிடங்கள் நியமனம் 17,000 பேருக்கு மட்டுமா பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பில் பாரிய குழப்பம் நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் பாரிய குறைபாடுகளும் குழப்பங்களும் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் பாடசாலைகளில் சுமார் 46,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படும் நிலையில், முதற்கட்டமாக 23,000 ஆசிரியர்களை மாத்திரம் ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதற்காக சுமார் ஒரு இலட்சத்து 29 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், குறித்த போட்டிப் பரீட்சையின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.எனினும், விண்ணப்பதாரர்கள் பல்வேறு பாடங்களுக்கு விண்ணப்பித்துள்ளதால், அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதன் காரணமாக எவ்வித சட்டச் சிக்கல்களும் இல்லாத சுமார் 17,000 பேருக்கு மாத்திரமே எதிர்வரும் ஜனவரி மாதத்தில் முதற்கட்ட ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும், ஏனையோருக்குப் படிப்படியாக நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கல்வி அமைச்சின் முறையான திட்டமிடலின்மையே மாகாண மற்றும் வலய மட்டங்களில் இவ்வாறான குழப்பங்கள் ஏற்படுவதற்குக் காரணம் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு முன்னரே இவ்வாறான நடைமுறைச் சிக்கல்களைக் கண்டறிந்து தீர்வு வழங்கியிருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இதனிடையே, அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் நியமனங்களுக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.அரச பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படாத நிலையில், தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கும் அரச ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.பணம் செலுத்திப் பட்டம் பெற்றவர்கள் அரச சேவைக்குள் உள்வாங்கப்படும் அதேவேளை, இலவசக் கல்வியின் மூலம் பட்டம் பெற்றவர்கள் புறக்கணிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடு எனவும் அவர் விமர்சித்துள்ளார்.இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் இலவசக் கல்வி முறைமையின் முக்கியத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement