நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 38 மத்திய மற்றும் பெரிய அளவிலான நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தெதுரு ஓயா, இராஜாங்கனை, இங்கினிமிட்டிய, யான் ஓயா மற்றும் உஸ்கல சியம்பலன்கமுவ உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களில் வான்பாயும் நீரின் அளவு ஒப்பீட்டளவில் அதிகமாகக் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலைமையில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான ஆபத்து அவதானிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்ந்த நிலையிலேயே காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று (27) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறைவான மழைவீழ்ச்சி பதிவாகியிருந்த போதிலும், களனி கங்கை மற்றும் களு கங்கையின் மேல்நிலைப் பகுதிகளில் சில இடங்களில் 40 முதல் 60 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன் காரணமாகப் பெரும்பாலான ஆறுகளின் மேல்நிலைப் பகுதிகளில் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகின்ற போதிலும், சில தாழ்நிலப் பகுதிகளில் இன்னமும் சிறிய அளவிலான வெள்ள நிலைமை நீடித்து வருகின்றது.
நில்வளா கங்கையின் அக்குரஸ்ஸ பகுதிக்குக் கீழுள்ள தலஹகொடை மற்றும் மாத்தறையை அண்மித்த பகுதிகளிலும், கிங் கங்கையின் பத்தேகம பகுதியிலும் நீர்மட்டம் சிறிய அளவிலான வெள்ள மட்டத்தில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, களு கங்கையின் மில்லகந்த, உடுபவுல மற்றும் எல்லகாவ ஆகிய பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகின்றது.
இதனால் களுத்துறை மாவட்டத்தில் ஆற்றை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவின் மேல்நிலைப் பகுதிகளில் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகின்ற போதிலும், கம்பஹா மாவட்டத்தின் கடான மற்றும் ஜா-எல உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் தொடர்ந்து தேங்கி நிற்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (28) நாட்டின் சில பகுதிகளில் சாதாரண மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால், மழை பெய்யும் இடங்களில் ஆறுகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளின் நீர்மட்டம் மீண்டும் உயரக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக ஆறுகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், வெள்ளநீர் தேங்கியுள்ள இடங்களில் நீராடுதல், நீர் விளையாட்டுக்களில் ஈடுபடுதல் மற்றும் ஏனைய ஆபத்தான செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் வான்பாயும் 38 நீர்த்தேக்கங்கள் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுமா அபாயத்தில் உள்ள பகுதிகள் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 38 மத்திய மற்றும் பெரிய அளவிலான நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.குறிப்பாக தெதுரு ஓயா, இராஜாங்கனை, இங்கினிமிட்டிய, யான் ஓயா மற்றும் உஸ்கல சியம்பலன்கமுவ உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களில் வான்பாயும் நீரின் அளவு ஒப்பீட்டளவில் அதிகமாகக் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய நிலைமையில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான ஆபத்து அவதானிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்ந்த நிலையிலேயே காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.நேற்று (27) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறைவான மழைவீழ்ச்சி பதிவாகியிருந்த போதிலும், களனி கங்கை மற்றும் களு கங்கையின் மேல்நிலைப் பகுதிகளில் சில இடங்களில் 40 முதல் 60 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.இதன் காரணமாகப் பெரும்பாலான ஆறுகளின் மேல்நிலைப் பகுதிகளில் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகின்ற போதிலும், சில தாழ்நிலப் பகுதிகளில் இன்னமும் சிறிய அளவிலான வெள்ள நிலைமை நீடித்து வருகின்றது.நில்வளா கங்கையின் அக்குரஸ்ஸ பகுதிக்குக் கீழுள்ள தலஹகொடை மற்றும் மாத்தறையை அண்மித்த பகுதிகளிலும், கிங் கங்கையின் பத்தேகம பகுதியிலும் நீர்மட்டம் சிறிய அளவிலான வெள்ள மட்டத்தில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, களு கங்கையின் மில்லகந்த, உடுபவுல மற்றும் எல்லகாவ ஆகிய பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகின்றது.இதனால் களுத்துறை மாவட்டத்தில் ஆற்றை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவின் மேல்நிலைப் பகுதிகளில் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகின்ற போதிலும், கம்பஹா மாவட்டத்தின் கடான மற்றும் ஜா-எல உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் தொடர்ந்து தேங்கி நிற்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று (28) நாட்டின் சில பகுதிகளில் சாதாரண மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால், மழை பெய்யும் இடங்களில் ஆறுகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளின் நீர்மட்டம் மீண்டும் உயரக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.குறிப்பாக ஆறுகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அத்துடன், வெள்ளநீர் தேங்கியுள்ள இடங்களில் நீராடுதல், நீர் விளையாட்டுக்களில் ஈடுபடுதல் மற்றும் ஏனைய ஆபத்தான செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.