• May 18 2026

இளம் தம்பதியினர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு ; புதுவருட தினத்தில் அரங்கேறிய கொடூரம்

Aathira / Jan 3rd 2026, 9:17 am
image

வவுனியா கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் கணவன் மற்றும் மனைவியின் சடலம் மீட்கப்பட்டது.

குறித்த சம்பவம் புதுவருடதினமான நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், 

புதுவருடதினமான நேற்று முன்தினம் இரவு குறித்த கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.

இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து இருவரும் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இதனால் நீரில் மூழ்கி இருவரும் சாவடைந்துள்ளனர். 

இந்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த கிருசாந்தன்(22) நிசாந்தினி(19) ஆகிய இளம் தம்பதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இளம் தம்பதியினர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு ; புதுவருட தினத்தில் அரங்கேறிய கொடூரம் வவுனியா கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் கணவன் மற்றும் மனைவியின் சடலம் மீட்கப்பட்டது.குறித்த சம்பவம் புதுவருடதினமான நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், புதுவருடதினமான நேற்று முன்தினம் இரவு குறித்த கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனையடுத்து இருவரும் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் நீரில் மூழ்கி இருவரும் சாவடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த கிருசாந்தன்(22) நிசாந்தினி(19) ஆகிய இளம் தம்பதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement