• May 18 2026

கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத்தடை

Aathira / Jan 3rd 2026, 10:35 am
image

அம்பத்தலையிலிருந்து தெஹிவளைக்கு நீர் விநியோகிக்கும் பிரதான குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக இன்று (3) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. 

இதற்கமைய மொரட்டுவை, ராவத்தாவத்தை, சொய்சாபுர, ரத்மலானை, கல்கிஸ்ஸை, தெஹிவளை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா, கொலன்னாவ ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. 

இதற்கு மேலதிகமாக பத்தரமுல்லைப் பிரதேசத்திற்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்று நள்ளிரவுக்கு முன் சீரமைத்து வழமைபோல  நீர் விநியோகத்தை மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கிறது.

கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத்தடை அம்பத்தலையிலிருந்து தெஹிவளைக்கு நீர் விநியோகிக்கும் பிரதான குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக இன்று (3) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதற்கமைய மொரட்டுவை, ராவத்தாவத்தை, சொய்சாபுர, ரத்மலானை, கல்கிஸ்ஸை, தெஹிவளை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா, கொலன்னாவ ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக பத்தரமுல்லைப் பிரதேசத்திற்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்று நள்ளிரவுக்கு முன் சீரமைத்து வழமைபோல  நீர் விநியோகத்தை மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கிறது.

Advertisement

Advertisement

Advertisement