• Aug 17 2026

சமூக வலைத்தளங்களில் தமக்கு எதிராக அவதூறு - CIDஐ நாடிய கெமுனு விஜேரத்ன

Chithra / Aug 17th 2026, 9:57 am
image


இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, சமூக வலைத்தளங்கள் ஊடாகத் தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அவதூறுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


‘மெட்ரோ பஸ்கள்’ தொடர்பாக தான் வெளியிட்ட கருத்தை மையப்படுத்தி சமூக வலைத்தளங்களில் தமக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்படுவதாகக் குறிப்பிட்டே அவர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.


இதுதொடர்பில் கருத்து தெரிவித்த கெமுனு விஜேரத்ன, மெட்ரோ பஸ் திட்டத்தை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பிப்பதற்கு தான் தயாராகியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.


2023ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், மெட்ரோ பஸ் திட்டம் தொடர்பான யோசனைத் திட்டமொன்றை போக்குவரத்து அமைச்சிடம் சமர்ப்பித்ததாகவும், அதற்கான எழுத்துப்பூர்வ ஆவணம் தம்மிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சீனா எக்சிம் வங்கியின் கடனைப் பெற்றே இந்தத் திட்டத்தை முன்னெடுக்க முயற்சித்ததாகவும், மக்களின் வரிப் பணத்தை பயன்படுத்தி இதனை மேற்கொள்ள முயற்சிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், இதுபோன்ற தாழ்தள பஸ்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே லேலண்ட் நிறுவனத்தினால் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாகவும், அரசாங்கப் பங்குகளைக் கொண்ட அந்த நிறுவனத்தினால் 60 பஸ்கள் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


அவற்றில் சில பஸ்கள் தற்போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக இயக்கப்பட்டு வருவதாகவும், பனாகொடையில் உள்ள லேலண்ட் நிறுவன வளாகத்தில் இதுபோன்ற மேலும் 20 பஸ்கள் இருப்பதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


இவ்வாறான பஸ்களை இயக்குவதில் அதிக எரிபொருள் செலவு ஏற்படுவதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு லீட்டர் டீசலுக்கு சுமார் 1.5 முதல் 2 கிலோமீற்றர் வரையே பயணிக்க முடியும் என தெரிவித்துள்ளார். 


சமூக வலைத்தளங்களில் தமக்கு எதிராக அவதூறு - CIDஐ நாடிய கெமுனு விஜேரத்ன இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, சமூக வலைத்தளங்கள் ஊடாகத் தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அவதூறுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.‘மெட்ரோ பஸ்கள்’ தொடர்பாக தான் வெளியிட்ட கருத்தை மையப்படுத்தி சமூக வலைத்தளங்களில் தமக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்படுவதாகக் குறிப்பிட்டே அவர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.இதுதொடர்பில் கருத்து தெரிவித்த கெமுனு விஜேரத்ன, மெட்ரோ பஸ் திட்டத்தை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பிப்பதற்கு தான் தயாராகியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.2023ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், மெட்ரோ பஸ் திட்டம் தொடர்பான யோசனைத் திட்டமொன்றை போக்குவரத்து அமைச்சிடம் சமர்ப்பித்ததாகவும், அதற்கான எழுத்துப்பூர்வ ஆவணம் தம்மிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சீனா எக்சிம் வங்கியின் கடனைப் பெற்றே இந்தத் திட்டத்தை முன்னெடுக்க முயற்சித்ததாகவும், மக்களின் வரிப் பணத்தை பயன்படுத்தி இதனை மேற்கொள்ள முயற்சிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், இதுபோன்ற தாழ்தள பஸ்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே லேலண்ட் நிறுவனத்தினால் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாகவும், அரசாங்கப் பங்குகளைக் கொண்ட அந்த நிறுவனத்தினால் 60 பஸ்கள் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.அவற்றில் சில பஸ்கள் தற்போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக இயக்கப்பட்டு வருவதாகவும், பனாகொடையில் உள்ள லேலண்ட் நிறுவன வளாகத்தில் இதுபோன்ற மேலும் 20 பஸ்கள் இருப்பதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.இவ்வாறான பஸ்களை இயக்குவதில் அதிக எரிபொருள் செலவு ஏற்படுவதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு லீட்டர் டீசலுக்கு சுமார் 1.5 முதல் 2 கிலோமீற்றர் வரையே பயணிக்க முடியும் என தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement