வட மாகாணத்திற்குச் சேவையாற்றும் முக்கிய மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகளில் ஒன்றான வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் நிலவும் மயக்கவியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களின் கடும் பற்றாக்குறை தொடர்பில் சுகாதாரத் துறைசார் தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களாக மருத்துவமனை ஒரேயொரு மயக்கவியல் நிபுணருடன் மாத்திரமே இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவசர மற்றும் விபத்து சிகிச்சை அறுவை கூடங்கள், பல்வேறு துறைகளின் வழக்கமான அறுவை சிகிச்சைகள், எலும்பியல் அறுவை கூடம், தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU), முதன்மை PCI உள்ளிட்ட இதய கதீட்டராக்கம் மற்றும் ஏனைய சிகிச்சைகளுக்கான மயக்கவியல் ஆதரவு என பல்வேறு சேவைகளையும் குறித்த ஒரேயொரு நிபுணரே கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைசார் தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன் காரணமாக வழக்கமான அறுவை சிகிச்சை சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், புற்றுநோய் அறுவை சிகிச்சைகள், வேதனை தணிப்பு சிகிச்சைகள் மற்றும் அவசர காயங்களுக்கான சில அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், காது-மூக்கு-தொண்டை, வாய் மற்றும் முகச்சீரமைப்பு, மகப்பேறு மற்றும் பெண்நோயியல், எலும்பியல் மற்றும் சிறுநீரக சிகிச்சைகளுக்கான காத்திருப்பு காலமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவசர நிலைகளில் நோயாளர்களை யாழ்ப்பாணம் அல்லது அனுராதபுரம் போதனா மருத்துவமனைகளுக்கு மாற்ற வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைசார் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதனால் அறுவை சிகிச்சை சேவைகளில் கடும் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த நிலைமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை தற்காலிக ஏற்பாடுகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா வைத்தியசாலையில் மயக்கவியல், அறுவை சிகிச்சை நிபுணர்கள் பற்றாக்குறை – பொதுமக்கள் கவலை வட மாகாணத்திற்குச் சேவையாற்றும் முக்கிய மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகளில் ஒன்றான வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் நிலவும் மயக்கவியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களின் கடும் பற்றாக்குறை தொடர்பில் சுகாதாரத் துறைசார் தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.கடந்த மூன்று மாதங்களாக மருத்துவமனை ஒரேயொரு மயக்கவியல் நிபுணருடன் மாத்திரமே இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.அவசர மற்றும் விபத்து சிகிச்சை அறுவை கூடங்கள், பல்வேறு துறைகளின் வழக்கமான அறுவை சிகிச்சைகள், எலும்பியல் அறுவை கூடம், தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU), முதன்மை PCI உள்ளிட்ட இதய கதீட்டராக்கம் மற்றும் ஏனைய சிகிச்சைகளுக்கான மயக்கவியல் ஆதரவு என பல்வேறு சேவைகளையும் குறித்த ஒரேயொரு நிபுணரே கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைசார் தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.இதன் காரணமாக வழக்கமான அறுவை சிகிச்சை சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், புற்றுநோய் அறுவை சிகிச்சைகள், வேதனை தணிப்பு சிகிச்சைகள் மற்றும் அவசர காயங்களுக்கான சில அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், காது-மூக்கு-தொண்டை, வாய் மற்றும் முகச்சீரமைப்பு, மகப்பேறு மற்றும் பெண்நோயியல், எலும்பியல் மற்றும் சிறுநீரக சிகிச்சைகளுக்கான காத்திருப்பு காலமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.அவசர நிலைகளில் நோயாளர்களை யாழ்ப்பாணம் அல்லது அனுராதபுரம் போதனா மருத்துவமனைகளுக்கு மாற்ற வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைசார் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.இதனால் அறுவை சிகிச்சை சேவைகளில் கடும் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.இந்த நிலைமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை தற்காலிக ஏற்பாடுகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.