• Oct 28 2026

ஞானசார தேரர் விவகாரத்தில் மகாநாயக்க தேரர்கள் தலையிடுவார்களா? ரணில் கட்சியின் திட்டம் என்ன?

Chithra / Oct 27th 2026, 10:39 am
image


சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.


மூன்று பிரதான பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் தலையீட்டுடன் இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.


விசேட அறிக்கையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.


நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச சிறைத்தண்டனை 18 மாதங்கள் மாத்திரமே என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா வழங்கிய விளக்கத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.


அத்துடன், ஞானசார தேரர் ஏற்கனவே 10 மாதங்களுக்கும் அதிகமான சிறைத்தண்டனையை அனுபவித்துள்ளதாகவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.


கடந்த காலங்களில் மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்ததையும் ஐக்கிய தேசியக் கட்சி நினைவுபடுத்தியுள்ளது.


மேலும், அவருக்கு மீண்டும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என உயர்நீதிமன்றத் தீர்ப்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.


இதேவேளை, ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் பேரணி மற்றும் சத்தியாக்கிரகப் போராட்டங்களில் பங்கேற்காத பௌத்த பிக்குகளுக்கு எதிராகவும் அரசாங்கம் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.


இத்தகைய நடவடிக்கைகள் பாரிய தவறுகள் என விமர்சித்துள்ள அக்கட்சி, ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதற்கு உத்தரவிட்டவர்கள் தொடர்பிலும் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது.


ஞானசார தேரர் விவகாரத்தில் மகாநாயக்க தேரர்கள் தலையிடுவார்களா ரணில் கட்சியின் திட்டம் என்ன சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.மூன்று பிரதான பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் தலையீட்டுடன் இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.விசேட அறிக்கையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச சிறைத்தண்டனை 18 மாதங்கள் மாத்திரமே என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா வழங்கிய விளக்கத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.அத்துடன், ஞானசார தேரர் ஏற்கனவே 10 மாதங்களுக்கும் அதிகமான சிறைத்தண்டனையை அனுபவித்துள்ளதாகவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.கடந்த காலங்களில் மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்ததையும் ஐக்கிய தேசியக் கட்சி நினைவுபடுத்தியுள்ளது.மேலும், அவருக்கு மீண்டும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என உயர்நீதிமன்றத் தீர்ப்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.இதேவேளை, ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் பேரணி மற்றும் சத்தியாக்கிரகப் போராட்டங்களில் பங்கேற்காத பௌத்த பிக்குகளுக்கு எதிராகவும் அரசாங்கம் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.இத்தகைய நடவடிக்கைகள் பாரிய தவறுகள் என விமர்சித்துள்ள அக்கட்சி, ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதற்கு உத்தரவிட்டவர்கள் தொடர்பிலும் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement