எரிபொருள் விலை உயர்வினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும், அஸ்வெசும பயனாளிகளுக்கு மேலதிக நிவாரணம் வழங்குவதற்கும் 47 பில்லியன் ரூபாய் பெறுமதியான மேலதிக நிதி ஒதுக்கீடு இன்று (04) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, குறித்த 47 பில்லியன் ரூபாயில் 41 பில்லியன் ரூபாய் வலுசக்தி அமைச்சின் செலவினங்களுக்காகவும்,
எஞ்சிய 6 பில்லியன் ரூபாய் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயல்பாட்டுத் திட்டத்தின் கீழ் அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவுகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தினால் உள்நாட்டு நுகர்வோருக்கு ஏற்படும் பொருளாதார அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கும் 41 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, அஸ்வெசும திட்டத்தின் கீழ் மிகவும் வறிய குடும்பங்களுக்கு 6,250 ரூபாயும், வறிய குடும்பங்களுக்கு 4,000 ரூபாயும் மேலதிக கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் வறிய பிரிவினருக்கான மேலதிக கொடுப்பனவு இரண்டு தவணைகளில் வழங்கப்படும் என்பதுடன், இந்த நிவாரணம் ஒருமுறை மாத்திரமே வழங்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வுக்கு மத்தியில் மக்களுக்கு கிடைக்கும் புதிய நிவாரணம் என்ன அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் எரிபொருள் விலை உயர்வினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும், அஸ்வெசும பயனாளிகளுக்கு மேலதிக நிவாரணம் வழங்குவதற்கும் 47 பில்லியன் ரூபாய் பெறுமதியான மேலதிக நிதி ஒதுக்கீடு இன்று (04) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதன்படி, குறித்த 47 பில்லியன் ரூபாயில் 41 பில்லியன் ரூபாய் வலுசக்தி அமைச்சின் செலவினங்களுக்காகவும், எஞ்சிய 6 பில்லியன் ரூபாய் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயல்பாட்டுத் திட்டத்தின் கீழ் அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவுகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தினால் உள்நாட்டு நுகர்வோருக்கு ஏற்படும் பொருளாதார அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கும் 41 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, அஸ்வெசும திட்டத்தின் கீழ் மிகவும் வறிய குடும்பங்களுக்கு 6,250 ரூபாயும், வறிய குடும்பங்களுக்கு 4,000 ரூபாயும் மேலதிக கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மிகவும் வறிய பிரிவினருக்கான மேலதிக கொடுப்பனவு இரண்டு தவணைகளில் வழங்கப்படும் என்பதுடன், இந்த நிவாரணம் ஒருமுறை மாத்திரமே வழங்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.