• Oct 29 2026

ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் நடந்தது என்ன? அடுத்தடுத்து சிக்கலில் அதிகாரிகள்! – வெளியான புதிய உத்தரவு!

Chithra / Oct 29th 2026, 10:36 am
image


ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மேலும் ஒரு உயர் பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


அதன்படி, கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றத் தவறியமை காரணமாக ஹோமாகம தலைமையக பொலிஸ் பரிசோதகரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்ய பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


சந்தேகநபரின் மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளின் கடமை தவறுதல் மற்றும் பொறுப்பற்ற செயற்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (28) பிற்பகல் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.


கைது செய்யப்பட்டவர் ஹொரணை, பெல்லபிட்டிய பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


முன்னதாக, இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகள் கடந்த 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.


பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

 

இந்நிலையில் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் மனைவி உள்ளிட்ட ஐந்து பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


குறித்த இளைஞனின் இறுதிச்சடங்கு இன்று (29) கிரிவத்துடுவ – கல்கந்த பொது மயானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, இறுதிச்சடங்கு நடைபெறும் காலப்பகுதியில் கிரிவத்துடுவ, முனுமலேவத்த, 17ஆவது குறுக்குச் சந்தியிலிருந்து கல்கந்த பொது மயானம் வரையிலான பிரதான வீதிகள் மற்றும் உப வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் வகையிலும், வீதிப் போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கஹத்துடுவ பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய, கஸ்பேவ மாவட்ட நீதிமன்றம் நேற்று (28) குறித்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


மேலும், இந்த நீதிமன்ற உத்தரவு 14 நாட்களுக்குச் செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் நடந்தது என்ன அடுத்தடுத்து சிக்கலில் அதிகாரிகள் – வெளியான புதிய உத்தரவு ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மேலும் ஒரு உயர் பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.அதன்படி, கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றத் தவறியமை காரணமாக ஹோமாகம தலைமையக பொலிஸ் பரிசோதகரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்ய பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.சந்தேகநபரின் மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளின் கடமை தவறுதல் மற்றும் பொறுப்பற்ற செயற்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (28) பிற்பகல் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.கைது செய்யப்பட்டவர் ஹொரணை, பெல்லபிட்டிய பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முன்னதாக, இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகள் கடந்த 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் மனைவி உள்ளிட்ட ஐந்து பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.குறித்த இளைஞனின் இறுதிச்சடங்கு இன்று (29) கிரிவத்துடுவ – கல்கந்த பொது மயானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இறுதிச்சடங்கு நடைபெறும் காலப்பகுதியில் கிரிவத்துடுவ, முனுமலேவத்த, 17ஆவது குறுக்குச் சந்தியிலிருந்து கல்கந்த பொது மயானம் வரையிலான பிரதான வீதிகள் மற்றும் உப வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் வகையிலும், வீதிப் போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கஹத்துடுவ பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய, கஸ்பேவ மாவட்ட நீதிமன்றம் நேற்று (28) குறித்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.மேலும், இந்த நீதிமன்ற உத்தரவு 14 நாட்களுக்குச் செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement