மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னஉப்போடை களப்பு பகுதியில் இன்று மாலை இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சின்னஉப்போடை பகுதியில் உள்ள வாவியில், இரண்டு சடலங்கள் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தடயவியல் பிரிவு அதிகாரிகளும் நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்ட சடலங்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட இரு சடலங்களும் ஆண்களுடையவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை அவர்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் கள்விற்பனை நிலையம் ஒன்று இயங்கி வருவதால், அங்கு வந்தவர்களாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், சடலங்கள் காணப்பட்ட இடத்துக்கு அருகில் இரண்டு சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற அனுமதியைப் பெற்று பிரேத பரிசோதனைக்காக சடலங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு வாவியில் மிதந்த இரு சடலங்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னஉப்போடை களப்பு பகுதியில் இன்று மாலை இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சின்னஉப்போடை பகுதியில் உள்ள வாவியில், இரண்டு சடலங்கள் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தடயவியல் பிரிவு அதிகாரிகளும் நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்ட சடலங்களை மீட்டனர்.மீட்கப்பட்ட இரு சடலங்களும் ஆண்களுடையவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை அவர்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் கள்விற்பனை நிலையம் ஒன்று இயங்கி வருவதால், அங்கு வந்தவர்களாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.மேலும், சடலங்கள் காணப்பட்ட இடத்துக்கு அருகில் இரண்டு சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நீதிமன்ற அனுமதியைப் பெற்று பிரேத பரிசோதனைக்காக சடலங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.