முல்லைத்தீவு, மாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் இதுவரை கரை திரும்பாத நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கைகளை உடனடியாகத் துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தளன் அடைக்கலமாதா கிராமிய கடற்றொழில் அமைப்பின் தலைவர் பாக்கியநாதன் பார்த்தீபன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மாத்தளன் கடற்பரப்பில் நேற்று (26) காலை 7.30 மணியளவில் கடற்றொழிலுக்காகச் சென்ற 27, 28 மற்றும் 54 வயதுடைய மூன்று மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்களில் இருவர் மாத்தளன் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றையவர் மன்னாரிலிருந்து கடற்றொழிலுக்காக மாத்தளனுக்கு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடலுக்குச் சென்ற மூவரும் இதுவரை கரை திரும்பாததால் அவர்களது குடும்பத்தினரும் சக கடற்றொழிலாளர்களும் பெரும் கவலையடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாக்கியநாதன் பார்த்தீபன், காணாமல் போன மீனவர்கள் தொடர்பாக உரிய திணைக்களத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து, கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
கடற்படையினர் உடனடியாகத் தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி, காணாமல் போன மீனவர்களைக் கண்டறிய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடற்படையினரால் அவர்களைக் கண்டறிய முடியாத பட்சத்தில், விமானப்படையின் உதவியையாவது பெற்று தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து, மீனவர்களைப் பாதுகாப்பாக மீட்டுத் தருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள், அவர்கள் எப்போது கரை திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் கடற்கரையில் காத்திருப்பதாகவும் பாக்கியநாதன் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடலில் நிலவும் கடும் சீற்றம் காரணமாக உள்ளூர் கடற்றொழிலாளர்களாலும் தேடுதல் நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், அரசாங்கமும் கடற்படையினரும் உடனடியாகத் தலையிட்டு காணாமல் போன மீனவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் இதுவரை கரை திரும்பாத சம்பவம் மாத்தளன் பகுதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன மீனவர்களை விரைவாகக் கண்டறிந்து பாதுகாப்பாக மீட்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்களும் கடற்றொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு கடலில் காணாமல் போன மூன்று மீனவர்கள் கடற்கரையில் கண்ணீருடன் காத்திருக்கும் உறவினர்கள் முல்லைத்தீவு, மாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் இதுவரை கரை திரும்பாத நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கைகளை உடனடியாகத் துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாத்தளன் அடைக்கலமாதா கிராமிய கடற்றொழில் அமைப்பின் தலைவர் பாக்கியநாதன் பார்த்தீபன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.மாத்தளன் கடற்பரப்பில் நேற்று (26) காலை 7.30 மணியளவில் கடற்றொழிலுக்காகச் சென்ற 27, 28 மற்றும் 54 வயதுடைய மூன்று மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.இவர்களில் இருவர் மாத்தளன் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றையவர் மன்னாரிலிருந்து கடற்றொழிலுக்காக மாத்தளனுக்கு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.கடலுக்குச் சென்ற மூவரும் இதுவரை கரை திரும்பாததால் அவர்களது குடும்பத்தினரும் சக கடற்றொழிலாளர்களும் பெரும் கவலையடைந்துள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாக்கியநாதன் பார்த்தீபன், காணாமல் போன மீனவர்கள் தொடர்பாக உரிய திணைக்களத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.இதனையடுத்து, கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.எனினும், காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.கடற்படையினர் உடனடியாகத் தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி, காணாமல் போன மீனவர்களைக் கண்டறிய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.கடற்படையினரால் அவர்களைக் கண்டறிய முடியாத பட்சத்தில், விமானப்படையின் உதவியையாவது பெற்று தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து, மீனவர்களைப் பாதுகாப்பாக மீட்டுத் தருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள், அவர்கள் எப்போது கரை திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் கடற்கரையில் காத்திருப்பதாகவும் பாக்கியநாதன் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.அத்துடன், கடலில் நிலவும் கடும் சீற்றம் காரணமாக உள்ளூர் கடற்றொழிலாளர்களாலும் தேடுதல் நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நிலையில், அரசாங்கமும் கடற்படையினரும் உடனடியாகத் தலையிட்டு காணாமல் போன மீனவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் இதுவரை கரை திரும்பாத சம்பவம் மாத்தளன் பகுதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.காணாமல் போன மீனவர்களை விரைவாகக் கண்டறிந்து பாதுகாப்பாக மீட்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்களும் கடற்றொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.