• Apr 21 2026

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை!

Chithra / Nov 6th 2025, 8:58 am
image


2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, அதாவது வரவு செலவுத் திட்ட உரை நாளை இடம்பெறவுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாளை பிற்பகல் 1.30 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பைச் சமர்ப்பிக்க உள்ளார்.

அதன்படி, வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 6 நாட்கள் இடம்பெறவுள்ளது. 

இரண்டாவது வாசிப்பின் வாக்கெடுப்பு 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது. 

குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 நாட்கள் நடத்தப்படவுள்ளது. 

மூன்றாவது வாசிப்பின் வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.


2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, அதாவது வரவு செலவுத் திட்ட உரை நாளை இடம்பெறவுள்ளது.நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாளை பிற்பகல் 1.30 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பைச் சமர்ப்பிக்க உள்ளார்.அதன்படி, வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 6 நாட்கள் இடம்பெறவுள்ளது. இரண்டாவது வாசிப்பின் வாக்கெடுப்பு 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது. குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 நாட்கள் நடத்தப்படவுள்ளது. மூன்றாவது வாசிப்பின் வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement